எல் சால்வதோரில் குருத்தோலை ஞாயிறு எல் சால்வதோரில் குருத்தோலை ஞாயிறு 

வாரம் ஓர் அலசல் – இளையோரின் நல்வாழ்வுக்கு ஆலோசனைகள்

கத்தோலிக்கத் திருஅவையில், ஈராண்டுக்கு ஒருமுறை உலகில் ஏதாவது ஒரு நாட்டில், உலக இளையோர் நாள் சிறப்பிக்கப்படும்வேளை, ஒவ்வோர் ஆண்டும் குருத்தோலை ஞாயிறன்று, மறைமாவட்ட அளவில் இந்த நாள் சிறப்பிக்கப்படுகின்றது.

மேரி தெரேசா - வத்திக்கான்

ஏப்.15,2019. ஏப்ரல் 14, இஞ்ஞாயிறன்று, உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவை, “நான் ஆண்டவரின் அடிமை, உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் (லூக்.1,38)” என்ற தலைப்பில், 34வது உலக இளையோர் நாளைச் சிறப்பித்தது. இளையோரின் ஒருங்கிணைந்த நல்வாழ்வில் அதிக அக்கறை காட்டிவரும் திருஅவை, 1986ம் ஆண்டில், முதல் உலக இளையோர் நாளைச் சிறப்பித்தது. ஈராண்டுக்கு ஒருமுறை உலகில் ஏதாவது ஒரு நாட்டில், உலக இளையோர் நாள் சிறப்பிக்கப்படும்வேளை, ஒவ்வோர் ஆண்டும் குருத்தோலை ஞாயிறன்று, மறைமாவட்ட அளவில் இந்த நாள் சிறப்பிக்கப்படுகின்றது. இந்நாளையொட்டி, இளையோரின் மனமாற்றம் என்ற தலைப்பில் தன்  எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறார், அருள்பணி ரீகன் அவர்கள். இவர், சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர்.

வாரம் ஓர் அலசல் – இளையோரின் நல்வாழ்வுக்கு ஆலோசனைகள்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 April 2019, 15:09