தேடுதல்

உயிர்த்த கிறிஸ்து உயிர்த்த கிறிஸ்து 

வாரம் ஓர் அலசல் – வாழ்விற்கு இயேசுவின் உயிர்ப்பு தரும் பாடம்

ஒரு பொருள் உன் ஆன்மீகத்தை வளர்க்குமானால், அதை அதிகமாகப் பயன்படுத்து. ஒரு பொருள் உன் ஆன்மீகத்தை அழிக்குமானால், அதைத் தூக்கி எறிந்துவிடு - புனித லொயோலா இஞ்ஞாசியார்

மேரி தெரேசா - வத்திக்கான்

அன்பு நேயர்களே, இயேசுவின் உயிர்ப்பு, கல்லறைக்கல் அகற்றப்பட்ட, பாறைகள் புரட்டிக் கிடந்த பெருவிழா. மனித வரலாறு கல்லறைக்கல்லின் முன்னால் முடிவுறுவதில்லை. நமது நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை சிதறடிக்கும் கடினமான பாறைகளையும் இறைவன் அகற்றுகிறார். வாழும் இறைவனை நம் வாழ்வின் மையமாக்குவோம். இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து திருவிழிப்பு திருவழிபாடுகளுக்கு அன்னையாக விளங்கும், புனித இரவு பாஸ்கா திருவிழிப்பு திருவழிபாட்டில் மறையுரையாற்றினார். என் வாழ்வில், நான் எங்கே செல்கிறேன்? என்ற கேள்வியையும் அனைத்து விசுவாசிகளிடம் முன்வைத்தார் திருத்தந்தை. கிறித்தவர்கள், இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவைச் சிறப்பித்த மகிழ்வில் இருக்கும் இவ்வேளையில், இன்றைய நிகழ்ச்சியில், என் வாழ்விற்கு இயேசுவின் உயிர்ப்பு தரும் பாடம் என்ன? என்று சிந்திப்பதற்கு நம்மை அழைக்கிறார், அருள்பணி பெலிக்ஸ், அன்பின் பணியாளர் சபை

வாரம் ஓர் அலசல் – என் வாழ்விற்கு இயேசுவின் உயிர்ப்பு தரும் பாடம்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 April 2019, 14:52