தேடுதல்

Vatican News
நியூயார்க் நகரில் கொண்டாட்டம் நியூயார்க் நகரில் கொண்டாட்டம்  (2019 Getty Images)

அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஆயிரக்கணக்கானோர் திருமுழுக்கு

அமெரிக்க ஐக்கிய நாட்டில் உயிர்ப்புப் பெருவிழா திருவிழிப்பு வழிபாட்டில் 37,000த்திற்கும் அதிகமானோர் கத்தோலிக்கத் திருஅவையில் இணைந்துள்ளனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டு தலத்திருஅவையில் இவ்வாண்டு சிறப்பிக்கப்பட்ட உயிர்ப்புப் பெருவிழா திருவிழிப்பு வழிபாட்டில் 37,000த்திற்கும் அதிகமானோர் கத்தோலிக்கத் திருஅவையில் இணைந்துள்ளனர் என்று அமெரிக்க ஆயர் பேரவையின் அறிக்கையொன்று கூறுகிறது.

லாஸ் ஆஞ்செலஸ் உயர் மறைமாவட்டத்தில், ஏப்ரல் 20 கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த திருவிழிப்பு வழிபாட்டில், 1,560 பேர் திருமுழுக்கு பெற்றனர் என்றும், மேலும் 913 பேர் திருமுழுக்கு பெறுவதற்குரிய தயாரிப்பில் இணைந்துள்ளனர் என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.

இதைத் தொடர்ந்து, கால்வெஸ்டன்-ஹூஸ்டன் உயர் மறைமாவட்டத்தில், 1,512 பேர் திருமுழுக்கு பெற்றனர் என்றும், மேலும் 631 பேர் திருமுழுக்கு பெறுவதற்குரிய தயாரிப்பில் இணைந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

டல்லஸ் மறைமாவட்டத்தில் 1.196 பேர், சியாட்டில் உயர் மறை மாவட்டத்தில் 769 பேர், அட்லான்டாவில் 645 பேர், வாஷிங்டன் உயர் மறைமாவட்டத்தில், 455 பேர் என்ற எண்ணிக்கையில், ஆயிரக்கணக்கானோர் திருமுழுக்கு பெற்றுள்ளனர் என்று அமெரிக்க ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

தங்கள் பகுதியில் வாழும் கத்தோலிக்கர்களின் எடுத்துக்காட்டான வாழ்வு, தங்களை, கத்தோலிக்கத் திருஅவையில் இணைய உந்தித்தள்ளியது என்று, திருமுழுக்கு பெற்றோர் பலர் கூறியதாக ஆயர் பேரவையின் அறிக்கை கூறுகிறது.

24 April 2019, 15:06