தேடுதல்

Vatican News
அசாமில் வாக்குப் பதிவுக்காக நிற்கும் மக்கள் அசாமில் வாக்குப் பதிவுக்காக நிற்கும் மக்கள்  (ANSA)

நேர்காணல்–இந்திய மக்களவைத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு

இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு, ஏப்ரல் 11, இவ்வியாழன் முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 18, புனித வியாழனன்று வாக்குப் பதிவு. வரும் மே 23ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கவுள்ளது

மேரி தெரேசா - வத்திக்கான்

இந்தியாவிலுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்குரிய முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 11, இவ்வியாழனன்று தொடங்கியுள்ளது. ஆந்திரா உட்பட 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளில் இந்த முதல் கட்ட ஓட்டுப் பதிவு இவ்வியாழனன்று தொடங்கியது. இப்பொதுத் தேர்தல், மே 19 வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. உலகிலே மிகப்பெரிய மக்களாட்சியைக் கொண்டிருக்கும் இந்தியாவின் வருங்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல் இது. இச்சூழலில், இத்தேர்தலில் கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு குறித்து, நவீன ஊடகம் வழியாகப் பகிர்ந்துகொள்கிறார், சமுதாய ஆர்வலர் எக்ஸ்.டி.செல்வராஜ் அவர்கள்

நேர்காணல் – இந்திய மக்களவைத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு
11 April 2019, 14:33