தேடுதல்

Vatican News
இயேசுவின் உயிர்ப்பு இயேசுவின் உயிர்ப்பு  

இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா சிறப்பு நிகழ்ச்சி

இறைமகன் இயேசுவின் உயிர்ப்பு, வரலாற்றில் நிகழ்ந்த, வரலாறை வியக்க வைத்த மாபெரும் நிகழ்வு. இயேசுவின் உயிர்ப்பில் இறையாட்சி மலர்ந்தது. புதிய விடியல் உதயமானது

வத்திக்கான் வானொலி அன்பு இதயங்கள் அனைவருக்கும், இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்கள்.

இயேசுவின் உயிர்ப்பால் நம் எல்லாருக்கும் புதுவாழ்வும் புதுப்படைப்பும் கிடைத்தன. இன்று அகமகிழ்வோம், அக்களிப்போம், அல்லேலூயா எனப் பாடுவோம்

உயிர்ப்புப் பெருவிழா செய்தி வழங்குபவர், அருள்பணி ஜூலியன், மட்டக்களப்பு மறைமாவட்டம், இலங்கை

இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா மகிழ்வில் பங்குகொள்ள இயலாத நம் உடன்பிறப்புக்களுக்காக, சென்னை மயிலை உயர்மறைமாவட்ட அருள்பணி ரீகன் அவர்களுடன் சேர்ந்து செபிப்போமா

இயேசுவின் பிறப்பு உலகிற்கு வியப்பாய் இருந்தது. இயேசுவின் உயிர்ப்பு உலகிற்கு மீட்பாய் மிளிர்ந்தது. இயேசுவின் உயிர்ப்பு நமக்குத் தருகின்ற உறுதிப்பாடுகள் நமது ஆன்மீக வாழ்க்கையைச் செழுமைப்படுத்துகின்றன, செம்மைப்படுத்துகின்றன. உலகம் முடியும்வரை எந்நாளும் உங்களுடன் இருப்பேன் என்ற உயிர்த்த கிறிஸ்துவின் அருள்மொழியில் ஆழமான நம்பிக்கை வைத்து வாழ்வைத் தொடர்வோம். உயிர்த்த இயேசுவின் ஒப்புரவும், மகிழ்வும், சமாதானமும், அமைதியும் நம் ஒவ்வொருவரையும் நிரப்புவதாக. இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில், வத்திக்கான் வானொலியின் அனைத்து அன்பு இதயங்களுக்கும், மீண்டும் ஒருமுறை எமது நல்வாழ்த்துக்கள்.

உயிர்ப்புப் பெருவிழா சிறப்பு நிகழ்ச்சி
20 April 2019, 10:41