தேடுதல்

எருசலேம் புனிதக் கல்லறைக் கோவிலில் புனித வியாழன் வழிபாடு எருசலேம் புனிதக் கல்லறைக் கோவிலில் புனித வியாழன் வழிபாடு 

புனித பூமி கிறிஸ்தவத் தலைவர்களின் உயிர்ப்பு விழாச் செய்தி

எருசலேம் நகரம் அமைதி மற்றும் ஒப்புரவின் நகரமாக விளங்கி; தன் பல்சமய, பன்முகக் கலாச்சார பண்பை எப்போதும் கொண்டிருக்கவேண்டும் - கிறிஸ்தவத் தலைவர்களின் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இயேசுவின் உயிர்ப்புக்கு சாட்சியாக விளங்கும் எருசலேம் நகரம், உயிர்ப்பின் நம்பிக்கையை வளர்க்கும் ஒரு மையப்புள்ளி என்று புனித பூமியில் பணியாற்றும் கிறிஸ்தவத் தலைவர்கள் இணைந்து, உயிர்ப்புச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளனர்.

கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை, 3ம் தியோபிலஸ், ஆர்மேனிய அப்போஸ்தலிக்க முதுபெரும் தந்தை நூர்ஹான் மனூஜியான், இலத்தீன் வழிபாட்டு முதுபெரும் தந்தை பேராயர் பியர்பத்திஸ்தா பிட்ஸபல்லா ஆகியோர் உட்பட, புனித பூமியில் பணியாற்றும் முதுபெரும் தந்தையர் மற்றும் அனைத்து கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் இணைந்து இச்செய்தியை வெளியிட்டுள்ளனர்.

காப்டிக் ஆர்த்தடாக்ஸ், சிரியன் ஆர்த்தடாக்ஸ், எத்தியோப்பிய ஆர்த்தடாக்ஸ், கிரேக்க மெல்கித்திய கத்தோலிக்க அவை, மாரனைட் முதுபெரும் தந்தையின் பிரதிநிதி, எபிஸ்கோபால் சபை, சிரிய கத்தோலிக்க திருஅவை ஆகிய கிறிஸ்தவ அவைகளின் பிரதிநிதிகள் இச்செய்தியில் கையொப்பம் இட்டுள்ளனர்.

எருசலேம் நகரம் அமைதி மற்றும் ஒப்புரவின் நகரமாக என்றென்றும் விளங்கவேண்டும் என்றும், இந்நகரம் தன் பல்சமய, பன்முகக் கலாச்சார பண்பை எப்போதும் கொண்டிருக்கவேண்டும் என்றும் கிறிஸ்தவத் தலைவர்களின் செய்தி அழைப்பு விடுக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 April 2019, 11:53