அமெரிக்க ஐக்கிய நாட்டின் கொலராடோ மாநிலத்தின் கொலம்பைன் பள்ளிமீது நடத்தப்பட்ட தாக்குதலின் 20ம் ஆண்டு நினைவு அமெரிக்க ஐக்கிய நாட்டின் கொலராடோ மாநிலத்தின் கொலம்பைன் பள்ளிமீது நடத்தப்பட்ட தாக்குதலின் 20ம் ஆண்டு நினைவு  

குடும்ப வாழ்வுக்கு ஆதரவளிக்கும் சமுதாயத்தைக் கட்டியெழுப்ப

வீடுகள், பள்ளிகள் மற்றும் நம் நகரங்களில் இடம்பெறும் வன்முறைகள், மக்களின் வாழ்வையும் நம்பிக்கையையும், மாண்பையும் தினமும் அழித்துக் கொண்டிருக்கின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

20 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க ஐக்கிய நாட்டின் கொலராடோ மாநிலத்தின் கொலம்பைன் பள்ளிமீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 மாணவர்களும் ஓர் ஆசிரியரும் உயிரிழந்ததை நினைவு கூர்ந்து, அப்பகுதி ஆயர்கள் இணைந்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் 1999ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் தேதி இடம்பெற்ற இந்த துயரம் நிறைந்த நிகழ்வு, மனதிலும் இதயங்களிலும் ஆழமான காயங்களை உருவாக்கியுள்ளது என தங்கள் செய்தியில் கூறியுள்ள ஆயர்கள், செபத்துடன் இந்நாளை நினைவுகூரும் அதேவேளை, இன்னும் சரிசெய்ய வேண்டியது அதிகம் உள்ளன என்பதையும் மறந்துவிடவில்லை எனவும் கூறியுள்ளனர்.

வீடுகள், பள்ளிகள் மற்றும் நம் நகரங்களில் இடம்பெறும் வன்முறைகள்,  மக்களின் வாழ்வையும் நம்பிக்கையையும், மாண்பையும் தினமும் அழித்துக் கொண்டிருக்கின்றன என்ற தங்கள் கவைலையையும் இச்செய்தியில் வெளியிட்டுள்ளனர், கொலராடோ ஆயர்கள்.

நல்மனதோராய் நாம் ஒவ்வொருவரும், வன்முறைக் கலாச்சாரத்தை அன்பால் எதிர்கொண்டு, குடும்ப வாழ்வுக்கு ஆதரவளிக்கும் சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் தங்கள் செய்தியில் விண்ணப்பித்துள்ளனர் ஆயர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 April 2019, 15:54