தேடுதல்

இந்தோனேசிய அரசுத்தலைவரின் தேர்தல் பிரச்சாரம் இந்தோனேசிய அரசுத்தலைவரின் தேர்தல் பிரச்சாரம்  

ஏனைய நடவடிக்கைகளைத் தவிர்த்து வாக்குச்சாவடிக்குச் செல்லுங்கள்

இந்தோனேசியாவில், ஏப்ரல் 17, புனித வியாழனன்று பொதுத்தேர்தல் தொடங்குகின்றது, இந்த தேர்தல் நாள், அனைத்து குடிமக்களுக்கும் முக்கியமான நாள் - ஆயர் Syukur

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இந்தோனேசியாவில் புனித வாரத்தில் தொடங்கும் பொதுத்தேர்தலில் பங்கு பெறுவதிலிருந்து தடைசெய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் தவிர்க்குமாறு, அந்நாட்டு திருஅவை அதிகாரி ஒருவர், கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

பெருமளவான இந்தோனேசிய மக்கள், வாக்குச்சாவடிகளுக்குச் சென்று, தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யமாட்டார்கள் என்ற அச்சம், அரசியல், சமய மற்றும் பொதுமக்கள் தலைவர்கள் மத்தியில் நிலவுவதால், அந்நாட்டின் போகோர் ஆயர் Paskalis Bruno Syukur அவர்கள், இவ்வாறு கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏப்ரல் 19, இந்தோனேசியாவிற்கு தேசிய விடுமுறை நாளாக இருப்பதால், அந்நாளில் மக்கள் விடுமுறையைச் செலவிடவே விரும்புவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளவேளை, இஸ்லாமயத்தால் அச்சுறுத்தப்பட்டுள்ள இளம் சனநாயகத்தின் வருங்காலத்திற்கு, இந்தப் பொதுத்தேர்தல் மிக முக்கியமானது என, ஆயர் Syukur அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புனித வாரத்தில், ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர், புனித பூமிக்கும், உரோம் நகருக்கும் திருப்பயணம் மேற்கொள்வார்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், நாட்டின் மீதும், குடிமக்கள் மீதும் அன்பு செலுத்தி, கத்தோலிக்கர் அந்நாள்களில் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு ஆயர் வலியுறுத்தியுள்ளார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 April 2019, 15:13