தேடுதல்

Vatican News
'பத்து இலட்சம் நிமிடங்கள் அமைதி-தவக்காலம்' அடையாளப் படம் 'பத்து இலட்சம் நிமிடங்கள் அமைதி-தவக்காலம்' அடையாளப் படம் 

2,00,000 மௌன நிமிடங்கள் வழியே திரட்டப்பட்டுள்ள நிதி

இளையோர், மௌனமான பல நிமிடங்களைக் கடைப்பிடித்து, அதன் வழியே திரட்டும் நிதியை, குரல் எழுப்ப இயலாத இளையோருக்கு வழங்குவது இம்முயற்சியின் நோக்கம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இங்கிலாந்தில் உள்ள பங்குத்தளங்கள், பள்ளிகள், மற்றும் இளையோர் அமைப்புக்கள் இணைந்து, Million Minutes' 'siLENT' அதாவது, 'பத்து இலட்சம் நிமிடங்கள் அமைதி-தவக்காலம்' என்ற முயற்சியை இத்தவக்காலத்தில் மேற்கொண்டு வருகின்றன என்று, ICN கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

இவ்வாண்டு தவக்காலத்தில், இளையோர், மௌனமான பல நிமிடங்களைக் கடைப்பிடித்து, அதன் வழியே திரட்டும் நிதியை, குரல் எழுப்ப இயலாத இளையோருக்கு வழங்குவது இம்முயற்சியின் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும், பல நாடுகளில், இளையோரின் குரல் ஒடுக்கப்பட்டுள்ளதை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இம்முயற்சியில், இதுவரை, ஏறத்தாழ 2,00,000 மௌன நிமிடங்கள் வழியே நிதி திரட்டப்பட்டுள்ளது என்று இவ்வமைப்பினர் கூறினர்.

Million Minutes' 'siLENT' என்ற இந்த முயற்சி, தவக்காலத்தையும் தாண்டி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (ICN)

17 April 2019, 15:26