தேடுதல்

ஜப்பானிய ஆக்ரமிப்புக்கு எதிரான தென் கொரிய எழுச்சியின் 100ம் ஆண்டு கொண்டாட்டம் ஜப்பானிய ஆக்ரமிப்புக்கு எதிரான தென் கொரிய எழுச்சியின் 100ம் ஆண்டு கொண்டாட்டம் 

தென் கொரியாவில் 1919ம் ஆண்டின் ஜப்பானின் வன்முறைக்கு...

தென் கொரியாவில், ஜப்பானின் ஆக்ரமிப்பை எதிர்த்து, 1919ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட, ‘மார்ச் முதல் தேதி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு, ஜப்பான் கிறிஸ்தவர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

தென் கொரியாவில் ஜப்பானின் ஆக்ரமிப்பை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம் கடுமையாய் நசுக்கப்பட்டதன் நூறாம் ஆண்டு, மார்ச் 01, இவ்வெள்ளியன்று நினைவுகூரப்பட்டவேளையில், ஜப்பான் கிறிஸ்தவர்கள் குழு ஒன்று, தங்கள் நாட்டின் இந்நடவடிக்கைக்கு மன்னிப்பு கேட்டுள்ளது.

1919ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி, ஜப்பான் காவல்துறை மற்றும் இராணுவத் துருப்புகள்,  Gyeonggi மாநிலத்தின், Hwaseongலுள்ள Jeam-ri கிறிஸ்தவ சபை ஆலயத்தில் இருபது பேரைப் படுகொலை செய்ததையடுத்து, ஜப்பானின் சார்பாக, மன்னிப்புக் கேட்டுள்ளது, ஜப்பான் கிறிஸ்தவ குழு ஒன்று.

தென் கொரியாவில் ஜப்பானின் ஆக்ரமிப்பை எதிர்த்து, 1919ம் ஆண்டு மார்ச் முதல் தேதியன்று, இயக்கம் ஒன்று துவங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் தென் கொரியர்களை ஒடுக்குவதற்கு ஜப்பானிய அதிகாரிகள், வன்முறைகளைப் பயன்படுத்தினர்.

‘மார்ச் முதல் தேதி இயக்கம்’ என்ற இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கிராம மக்களை, ஜப்பான் அதிகாரிகள் சித்ரவதைப்படுத்தி கொலை செய்தனர் மற்றும் ஆலயத்திற்கும் தீ வைத்தனர்.

ஜப்பானின் இந்த அடக்குமுறை நடவடிக்கையில், ஏறக்குறைய ஏழாயிரம் பேர் கொல்லப்பட்டனர், பத்தாயிரத்திற்கு அதிகமான மக்கள் காயமடைந்தனர் மற்றும் ஐம்பதாயிரம் பேரின் நிலை பற்றி தெரியவில்லை என செய்திகள் கூறுகின்றன. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 March 2019, 15:38