மொராக்கோ நாட்டின் Marrakesh நகர் மொராக்கோ நாட்டின் Marrakesh நகர் 

மொராக்கோவில் சமய சுதந்திரம் மேலும் தேவை

மொராக்கோ நாட்டை சகிப்புத்தன்மை கொண்டதாய் அமைப்பதில், மொராக்கோ கிறிஸ்தவர்கள் அவை எடுத்துவரும் முக்கிய முன்னெடுப்புகளை, அந்நாட்டு அரசர் 4ம் முகமது அவர்கள் அங்கீகரித்துள்ளார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மொராக்கோ நாட்டுத் திருத்தூதுப் பயணம் அண்மித்துவரும்வேளை, அந்நாட்டிற்கு மிகவும் தேவைப்படும் சமய சுதந்திரம் வழங்கப்படுவதற்கு, திருப்பீடம் தலையிடுமாறு, அந்நாட்டு கிறிஸ்தவர்கள் அவை, கேட்டுக்கொண்டுள்ளது.  

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 30,31 ஆகிய தேதிகளில் மொராக்கோவில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதையொட்டி, "Al Massae" எனப்படும் தினத்தாளில், இந்த விண்ணப்பத்தை வெளிப்படையாக வெளியிட்டுள்ளது, மொராக்கோ கிறிஸ்தவர்கள் அவை.

மொராக்கோவில் கிறிஸ்தவர்களின் சமய சுதந்திரத்தில் சில கூறுகள் மீறப்படுகின்றன என்றும், தவறான குற்றச்சாட்டு நடவடிக்கைகளில், கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதில், மொராக்கோ பாதுகாப்புப் படைகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன என்றும், அந்த அவை குறிப்பிட்டுள்ளது.  

மொராக்கோ நாட்டை சகிப்புத்தன்மை கொண்டதாய் அமைப்பதில், மொராக்கோ கிறிஸ்தவர்கள் அவை எடுத்துவரும் முயற்சிகளை, அந்நாட்டு அரசர் 4ம் முகமது அவர்கள் அங்கீகரித்துள்ளார் என, பீதேஸ் செய்தி கூறுகின்றது.

மொராக்கோ நாட்டு கிறிஸ்தவர்கள் அவை, சமய உரிமைகள் மற்றும், சமய சுதந்திர அவை, மொராக்கோ மனித உரிமைகள் கழகம் ஆகியவற்றை ஆதரிக்கின்றது.

மொராக்கோ மக்கள் தொகையில், பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்தவர்கள் 1.1 விழுக்காட்டினர் மட்டுமே. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 March 2019, 15:14