தேடுதல்

Vatican News
கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு - ஓவியம் கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு - ஓவியம் 

லெபனானில் உலக கிறிஸ்தவ ஒன்றிப்பு இளையோர் மாநாடு

லெபனான் நாட்டில், மார்ச் 25, கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு பெருவிழாவன்று, கிறிஸ்தவ, இஸ்லாமிய இளையோர் இணைந்து, அன்னை மரியாவுக்கு வணக்கம் செலுத்துவர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரில் மார்ச் 22ம் தேதி முதல் 26ம் தேதி முடிய, நடைபெறும் உலக கிறிஸ்தவ ஒன்றிப்பு இளையோர் மாநாட்டில், 40 நாடுகளிலிருந்து வருகை தரும் 1600 இளையோர் கலந்துகொள்கின்றனர் என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.

லெபனான் நாட்டின் கிறிஸ்தவ சபைகள், மத்திய கிழக்கு பகுதியின் சபைகள், மற்றும் Taizé குழுமம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில், இஸ்லாமிய இளையோரும் பங்கேற்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 25, கிறிஸ்து அறிவிப்பு பெருவிழாவன்று, கிறிஸ்தவ, இஸ்லாமிய இளையோர் இணைந்து, அன்னை மரியாவுக்கு வணக்கம் செலுத்துவர் என்று இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

2010ம் ஆண்டு முதல், லெபனான் நாட்டில் மார்ச் 25ம் தேதி, அன்னை மரியாவின் சிறப்புத் திருநாளாகவும், ஒரு தேசிய விடுமுறையாகவும் கொண்டாடப்படுகிறது என்றும், இத்திருநாளையொட்டி, லெபனான் நாட்டின் பல்வேறு நகரங்களில் அன்னை மரியாவுக்கு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன என்றும் பீதேஸ் செய்தி கூறுகிறது.

13 March 2019, 15:46