தேடுதல்

Vatican News
ISIS இஸ்லாமிய அரசின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட பெண்களும், குழந்தைகளும் ISIS இஸ்லாமிய அரசின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட பெண்களும், குழந்தைகளும்  (AFP or licensors)

2013ம் ஆண்டு கடத்தப்பட்ட ஆயர், உயிருடன்...

6 ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட ஆயர் இன்னும் தீவிரவாதிகளின் கைகளில் இருப்பதாகவும், விடுதலை குறித்த பேரங்கள் தொடர்வதாகவும் செய்திகள்.

2013ம் ஆண்டு கடத்தப்பட்ட ஆயர், உயிருடன்...

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

சிரியாவின் அலெப்போ நகரிலிருந்து 2013ம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்திச்செல்லப்பட்ட ஆயர் மார் கிரகோரியோஸ் யொஹான்னா இப்ராஹிம் அவர்கள், கடத்தல்காரர்களின் கைகளில் இன்னும் உயிருடன் இருப்பதாக லெபனான் பத்திரிகை ஒன்று அறிவித்துள்ளது.

சிரியாவின் கிழக்குப் பகுதியில், இஸ்லாமிய தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் Baghuz பகுதியில் ஆயர் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும், அவரின் விடுதலை குறித்த பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும், ஜெர்மனியில் சிரியா ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களிடையே பணியாற்றும் சிரியா நாட்டு அருள்பணியாளர் Samuel Gumus என்பவர் தெரிவித்ததாக அல்-அக்பர் என்ற லெபானிய பத்திரிகை தெரிவித்துள்ளது.

2013ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி, அலெப்போவின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் ஆயர் Boulos al-Yazigi அவர்களுடன், அதே நகரின் ஆர்த்தடாக்ஸ் சிரியா ஆயர் யொஹான்னா இப்ராஹிம் அவர்களும் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டார். சிரியா ஆர்த்தடாக்ஸ் ஆயர் குறித்து மட்டும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

11 March 2019, 15:55