தேடுதல்

மின்னணு வாக்குப்பதிவு முறையை விளக்கும் அதிகாரிகள் மின்னணு வாக்குப்பதிவு முறையை விளக்கும் அதிகாரிகள் 

இரு இந்தியப் பகுதிகளில் புனித வெள்ளி அரசு விடுமுறை...

முன்னாள் போர்த்துக்கீசிய காலனிகளாகிய, Dadra மற்றும் Nagar Haveli (Dnh), Daman மற்றும் Diu யூனியன் பகுதிகள், மகாராஷ்டிர மாநிலத்திற்கும், குஜராத் மாநிலத்திற்கும் இடையே அமைந்துள்ளன. இப்பகுதிகளில், ஏறக்குறைய ஒரு இலட்சம் கிறிஸ்தவர்கள் உள்ளனர்.

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

புனித வெள்ளி, தேசிய விடுமுறையாகக் கடைப்பிடிக்கப்படுவது, இந்திய வரலாற்றில் முதன்முறையாக, இரு இந்தியப் பகுதிகளில் இரத்து செய்யப்பட்டிருப்பது மிகவும் கவலை தருகின்றது என்று, இந்திய ஆயர் பேரவையின் பொதுச் செயலர், ஆயர் தியோடர் மஸ்கரீனஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்திருக்கின்ற, Dadra மற்றும் Nagar Haveli (Dnh), Daman மற்றும் Diu யூனியன் பகுதிகளில், புனித வெள்ளி, அரசு விடுமுறையாக கடைப்பிடிக்கப்படுவது, இவ்வாண்டு இரத்துசெய்யப்பட்டுள்ளது, முற்றிலும் அரசு நிர்வாகத்தின் பாகுபாட்டுச் செயல் என்று குறை கூறியுள்ளார், ஆயர் மஸ்கரீனஸ்.

அந்த யூனியன் பகுதிகளின் நிர்வாகிகள், கிறிஸ்தவர்களின் உணர்வுகளை மதித்து, பிரிவினை நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார், ஆயர் மஸ்கரீனஸ்.

நிர்வாகத்தின் இந்நடவடிக்கை குறித்து ஆசியச் செய்தியிடம் கருத்து தெரிவித்த ஆயர் மஸ்கரீனஸ் அவர்கள், அந்த யூனியன் பகுதியில் கிறிஸ்தவர்கள், சிறுபான்மை சமுதாயமாக இருப்பதால், அவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், நாட்டில் கிறிஸ்தவர்களின் இரு விழாக்கள் மட்டுமே, அரசு விடுமுறையாக உள்ளன என்றும், கிறிஸ்மஸ் நாளை, நல்ல நிர்வாக நாளாக அறிவிப்பதற்கு, முன்னர் முயற்சி இடம்பெற்றது என்றும் கூறியுள்ளார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 March 2019, 14:47