அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை 

மரணதண்டனை விதித்தல், அரசியலமைப்புக்கு எதிரானது

பெருங்குற்றங்களால் பாதிக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு ஆறுதலையும், மரணத் தணடனைகளுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பையும் தொடர்ந்து வெளிடும் திருஅவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டன் மாநிலத்தில், மரண தண்டனையை அகற்றுவதற்கு, செனட் அவையில் முன்வைக்கப்பட்டிருக்கும் சட்டப் பரிந்துரைக்கு, அம்மாநில ஆயர்கள், தங்கள் முழு ஆதரவை தெரிவித்துள்ளனர்.

மரணதண்டனையை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக, எக்காரணம் கொண்டும் சிறையைவிட்டு வெளிவர முடியாத ஆயுள் தண்டனையை புகுத்தும் பரிந்துரை குறித்து தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ள ஆயர்கள், மரணதண்டனை விதிப்பது, அரசியலமைப்புக்கு எதிரானது என, அண்மையில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பெருங்குற்றங்களால் பாதிக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு ஆறுதலையும், அவர்களுடன் ஒருமைப்பாட்டையும் வழங்கிவரும் தலத் திருஅவை அதிகாரிகள், மரணத் தணடனைகளுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பையும் தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளனர்.

கருவில் உருவானது முதல், இயற்கை மரணம் வரை, மனித வாழ்வு புனிதமானது என்ற உறுதியான நம்பிக்கையுடன், மரணதண்டனையை எதிர்த்து வருவதாகத் தெரிவித்துள்ளார், Seattle பேராயர் Peter Sartain.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 February 2019, 14:56