தேடுதல்

கோவிலுக்கு வெளியே மக்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் கோவிலுக்கு வெளியே மக்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் 

வெனிசுவேலா ஆயர் பேரவை, துறவியர் அமைப்பின் அழைப்பு

சுதந்திரமான, நீதி நிறைந்த தேர்தல்கள் வழியே, வெனிசுவேலா நாடு, குடியரசுப் பாதையில் மீண்டும் பயணிக்க வேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சுதந்திரமான, நீதி நிறைந்த தேர்தல்கள் வழியே, வெனிசுவேலா நாடு, குடியரசுப் பாதையில் மீண்டும் பயணிக்க வேண்டும் என்று அந்நாட்டு ஆயர் பேரவையும், துறவியர் அமைப்பும் இணைந்து அழைப்பு விடுத்துள்ளன.

பிப்ரவரி 4, இத்திங்களன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், நாட்டில் நிலவும் கொடுமையானச் சூழல்கள் முடிவுக்கு வரவேண்டும் என்றும், மனிதாபிமான அடிப்படையில் மக்களுக்கு உதவிகள் வந்தடைய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசுத் தலைவரின் ஆணைக்குச் செவிமடுத்து, மக்களை அநீதமான முறையில் அடக்கிவரும் இராணுவத்தினர், மக்களின் அழுகுரலுக்குச் செவிமடுத்து, அவர்களைக் காக்க முன்வரவேண்டும் என்று ஆயர்களும், துறவியரும் அழைப்பு விடுத்துள்ளனர்.

கடவுள் மீது நம்பிக்கையும், கொரொமோட்டோ அன்னை மரியாவின் பாதுகாவலில் நம்பிக்கையும் கொண்டு, நாட்டின் நல்லதொரு எதிர்காலத்திற்கு செபிக்கும்படி வெனிசுவேலா நாட்டு மக்களிடம் ஆயர்களும், துறவியரும் விண்ணப்பித்துள்ளனர். (CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 February 2019, 15:49