தேடுதல்

மெக்சிகோ எல்லையில் கட்டப்பட்டுவரும் தடுப்புச் சுவர் மெக்சிகோ எல்லையில் கட்டப்பட்டுவரும் தடுப்புச் சுவர் 

மெக்சிகோ தடுப்புச் சுவர் திட்டத்தை எதிர்க்கும் ஆயர்கள்

தற்போதைய உலகிற்குத் தேவைப்படுவது, தடுப்புச் சுவர்கள் அல்ல, மாறாக, இணைப்புப் பாலங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ள கருத்தில் உறுதியாக இருக்கும் அமெரிக்க ஆயர்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பல்வேறு சமூகநலத் திட்டங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த நிதிகளைக் கொண்டு, மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவரைக் கட்ட, அமெரிக்க அரசுத் தலைவர், டொனால்டு டிரம்ப் அவர்கள் திட்டமிட்டு வருவதற்கு, அந்நாட்டு ஆயர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.  

அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், மெக்சிகோவிற்கும் இடையே தடுப்புச்சுவரை எழுப்புவதற்குத் தேவையான நிதியை ஒதுக்க, அமெரிக்க காங்கிரஸ் அவை மறுத்துள்ளதைத் தொடர்ந்து, ஏனைய சமூகநலத் திட்டங்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதியை, சுவர் எழுப்புவதற்கு தான் பயன்படுத்தப் போவதாக, அரசுத் தலைவர் டிரம்ப் அவர்கள் அறிவித்துள்ளார்.

இது குறித்து தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை, இச்சுவர், இரு நட்பு நாடுகளுக்கிடையே பிரிவையும், பகைமையையும் குறிப்பதன் அடையாளமாக உள்ளது என்று, தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

தற்போதைய உலகிற்குத் தேவைப்படுவது, தடுப்புச் சுவர்கள் அல்ல, மாறாக, இணைப்புப் பாலங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிவரும் கருத்தில் தாங்கள் உறுதியாக இருப்பதாக, ஆயர்கள் தங்கள் அறிக்கையில் மேலும் கூறியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 February 2019, 16:55