தேடுதல்

மனித வாழ்வை ஆதரித்து அயர்லாந்து நாட்டில் நடைபெற்ற போராட்டம் மனித வாழ்வை ஆதரித்து அயர்லாந்து நாட்டில் நடைபெற்ற போராட்டம் 

வாழ்வை வலியுறுத்தி இடம்பெறவிருக்கும் பேரணி

ஒவ்வோர் ஆண்டும், வாழ்வுக்கு ஆதரவான பேரணியை, கத்தோலிக்க நிறுவனங்கள் இணைந்து நடத்திவருவது, மக்களில், மனிதவாழ்வின் மாண்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்கும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

சனவரி 20, வரும் ஞாயிறன்று, பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் மாநகரில், வாழ்வை வலியுறுத்தி இடம்பெறவிருக்கும் 13வது பேரணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அளித்துள்ள ஊக்கத்தை குறிப்பிட்டு, பிரான்ஸ் நாட்டில் பணியாற்றும் திருப்பீடத் தூதர், பேராயர் லூயிஜி வெந்தூரா (Luigi Ventura) அவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

'மருத்துவப்பணியாளர்களின் மனச்சான்றுடன் கூடிய மறுப்பு' என்ற மையக்கருத்துடன், வாழ்வை வலியுறுத்தி இடம்பெறவிருக்கும் இப்பேரணிக்கு ஆதரவாக அனுப்பப்பட்டுள்ள இச்செய்தியில், 'உலகின் அனைத்து தீமைகளுக்கும் காரணத்தை ஒரே வரியில் சொல்வதெனில், அது, வாழ்வை மறுப்பதிலிருந்து பிறக்கின்றது' என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் மறைக்கல்வி உரை ஒன்றில் கூறியதை, பேராயர் வெந்தூரா அவர்கள் நினைவு கூர்ந்துள்ளார்.

கருக்கலைத்தலை மிக எளிதாக ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை உருவாக்கும் இக்காலத்தில், பல்வேறு கத்தோலிக்க நிறுவனங்கள் இணைந்து, ஒவ்வோர் ஆண்டும், வாழ்வுக்கு ஆதரவான பேரணியை நடத்தி வருவது, மக்களில், மனிதவாழ்வு மற்றும் மாண்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் என்று பிரான்ஸ் தலத்திருஅவை தலைவர்கள் நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 January 2019, 16:03