தேடுதல்

பானமா இளையோர் நிகழ்வு பானமா இளையோர் நிகழ்வு 

பானமா இளையோர் நிகழ்வில் ஆயிரம் பூர்வீக இன இளையோர்

அமேசான் பகுதி நாடுகளின் பூர்வீக இனங்களைச் சார்ந்த இளையோர், பெருமளவில் பானமா வருவார்கள் என்று, அந்நாட்டு பூர்வீக இன இளையோர் எதிர்பார்க்கின்றனர்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

இம்மாதம் 22ம் தேதி முதல் 27ம் தேதி முடிய, பானமா நாட்டில் நடைபெறவிருக்கும் 34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில், முதல் முறையாக, ஐந்து கண்டங்களிலிருந்தும் பூர்வீக இன இளையோர் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உலக இளையோர் நாள் நிகழ்வுகளில், ஏறத்தாழ ஆயிரம் பூர்வீக இன இளையோர் உட்பட இரண்டு இலட்சத்திற்கு அதிகமான இளையோர், 155 நாடுகளிலிருந்து கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பின்பேரில், அந்தந்த நாட்டு ஆயர் பேரவைகளின் முயற்சிகளால், பழமையும் வளமையும் நிறைந்த கலாச்சாரங்களைக் கொண்ட பல்வேறு பூர்வீக இனங்களைச் சார்ந்த இளையோர் கலந்துகொள்வார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

பானமா உலக இளையோர் நிகழ்வுகள் தயாரிப்பில், பானமா அரசு அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றது என்றும், செய்திகள் கூறுகின்றன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2018ம் ஆண்டு சனவரியில், சிலே மற்றும் பெரு நாடுகளுக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டபோது, பூர்வீக இன மக்களைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (Zenit)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 January 2019, 16:03