தேடுதல்

Vatican News
ஓய்வுபெறும் Port Blair மறைமாவட்ட ஆயர் Aleixo Das Neves Dias ஓய்வுபெறும் Port Blair மறைமாவட்ட ஆயர் Aleixo Das Neves Dias  

Port Blair மறைமாவட்ட நிர்வாகி அ.பணி செல்வராஜ்

அந்தமான் நிகோபார் தீவுகளின் Port Blair மறைமாவட்ட நிர்வாகியாக, அருள்பணி விசுவாசம் செல்வராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

அந்தமான் நிகோபார் தீவுகளின் Port Blair மறைமாவட்ட ஆயர் Aleixo Das Neves Dias அவர்களின் பதவி விலகலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டதையடுத்து, அம்மறைமாவட்ட நிர்வாகியாக, அருள்பணி விசுவாசம் செல்வராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் என்று, இந்திய ஆயர் பேரவையின் பொதுச் செயலர், ஆயர் தியோடர் மஸ்கரீனஸ் அவர்கள் அறிவித்துள்ளார்.

ஓய்வுபெறும் ஆயர் Aleixo Das Neves Dias அவர்கள் ஆற்றியுள்ள பணிகளுக்கு நன்றி தெரிவித்துள்ள அதேவேளை, அருள்பணி விசுவாசம் செல்வராஜ் அவர்கள், தனது புதிய மேய்ப்புப்பணியை ஆற்றுவதற்கு, இறைவனும், அன்னை மரியாவும் உதவுவார்களாக எனச் செபித்து, தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார், ஆயர் மஸ்கரீனஸ்.

மேலும், ஹசாரிபாக் மறைமாவட்ட முன்னாள் ஆயர் Charles Soreng அவர்கள், சனவரி 11, இவ்வெள்ளிக்கிழமை காலையில் இறைவனடி எய்தினார் எனவும், ஆயர் தியோடர் மஸ்கரீனஸ் அவர்கள் அறிவித்துள்ளார்.

இயேசு சபையைச் சேர்ந்த, 84 வயது நிரம்பிய ஆயர் Charles Soreng அவர்கள், 1990ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி, ஹசாரிபாக் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

11 January 2019, 15:01