தேடுதல்

Vatican News
சுவிட்சர்லாந்து உலக கிறிஸ்தவ மன்றத்தில் திருத்தந்தை சுவிட்சர்லாந்து உலக கிறிஸ்தவ மன்றத்தில் திருத்தந்தை   (ANSA)

நேர்காணல் – இலங்கை ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபை

“நீதியை, ஆம், நீதியை மட்டுமே நிலைநிறுத்து” என்ற தலைப்பில், சனவரி 18, இவ்வெள்ளியன்று கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் தொடங்குகின்றது

மேரி தெரேசா – வத்திக்கான்

 

கிறிஸ்தவர்கள், ஒவ்வோர் ஆண்டும் சனவரி 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை, ஒவ்வொரு தலைப்பில், கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தைக் கடைப்பிடிக்கின்றனர். இவ்வாண்டு, சனவரி 18, இவ்வெள்ளியன்று தொடங்கும் இந்த ஒன்றிப்பு வாரத்திற்கு “நீதியை, ஆம், நீதியை மட்டுமே நிலைநிறுத்து (cf.இணை.ச.16:20)” என்பது, தலைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தை முன்னிட்டு, இலங்கை ஆங்கிலக்கன் கிறிஸ்தவ சபை அருள்பணி ஜான்சி மஞ்சுக்கா அவர்களைச் சந்தித்தோம். இவர், சுவிட்சர்லாந்திலுள்ள Bose கிறிஸ்தவ ஒன்றிப்பு குழுவில் பயிற்சிபெற்று வருகிறார். அக்குழு வத்திக்கான் வானொலிக்கு வந்திருந்த சமயம், மஞ்சுக்கா அவர்களைச் சந்தித்தோம். மேலும், இவர், கொழும்பு ஆங்கிலக்கன் கிறிஸ்தவ சபை மறைமாவட்டத்தின் சிலாபம் பங்குப் பொறுப்பாளராகப் பணியாற்றுகிறார்.

நேர்காணல் – இலங்கை ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபை

 

17 January 2019, 14:55