தேடுதல்

ஜகார்த்தா கத்தோலிக்கர் ஜகார்த்தா கத்தோலிக்கர் 

ஜகார்த்தா தலத்திருஅவை - 2019, ஞானத்தின் ஆண்டு

இந்தோனேசியாவில் எல்லாருக்கும் பகைவனாக இருப்பது ஊழல் எனவும், தேர்தல்களில், கத்தோலிக்கர், தங்களின் மனச்சாட்சியின்படி வாக்களிக்க வேண்டும் எனவும் தலத்திருஅவை அழைப்பு விடுத்துள்ளது

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

இந்தோனேசியாவின் ஜகார்த்தா உயர்மறைமாவட்டம், 2019ம் ஆண்டை, ஞானத்தின் ஆண்டு என அறிவித்து, கடைப்பிடித்து வருகிறது.

அந்நாட்டில், வருகிற ஏப்ரலில், அரசுத்தலைவர் மற்றும் மக்களவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளவேளை, ஜகார்த்தா தலத்திருஅவை, 2019ம் ஆண்டு முழுவதும், கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஒத்திணங்கும் விதத்தில், பல்வேறு சமுதாய விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளது என செய்திகள் கூறுகின்றன.

இந்தோனேசிய குடியரசுக்கு அடிப்படையாக அமைந்துள்ள பஞ்சசீலக் கொள்கைகள் பற்றிய மெய்யியல் விழுமியங்களை, தனது ஐந்தாண்டு திட்டத்தின் அடிப்படையில், ஜகார்த்தா உயர்மறைமாவட்டம், கடந்த நான்கு ஆண்டுகளாக, மேய்ப்புப்பணி நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து வந்துள்ளது.

இந்தோனேசிய மக்கள் பலரில், அந்நாட்டின் பஞ்சசீலக் கொள்கைகள் பற்றிய அறிவு குறைவுபடுவதால், இத்தகைய முயற்சியை, ஜகார்த்தா உயர்மறைமாவட்டம் இவ்வாண்டு எடுத்துள்ளது எனவும் செய்திகள் கூறுகின்றன. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 January 2019, 14:47