தேடுதல்

ஆப்ரிக்க நாடுகளுக்கு உதவும்படி, Catholicae Ecclesiae என்ற திருமடலை எழுதிய திருத்தந்தை 13ம் லியோ ஆப்ரிக்க நாடுகளுக்கு உதவும்படி, Catholicae Ecclesiae என்ற திருமடலை எழுதிய திருத்தந்தை 13ம் லியோ 

1888ம் ஆண்டு முதல் நிதி உதவி செய்யும் பிரான்ஸ் தலத்திருஅவை

1888ம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும், பிரான்சின் பங்கு ஆலயங்களில், திருக்காட்சிப் பெருவிழாவன்று திரட்டப்படும் நிதி, ஆப்பிரிக்காவில் உள்ள பல்வேறு மறைமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, ஒவ்வோர் ஆண்டும் பிரான்சின் பல்வேறு பங்கு ஆலயங்களில், திருக்காட்சிப் பெருவிழாவன்று திரட்டப்படும் நிதி, ஆப்பிரிக்காவில் உள்ள பல்வேறு மறைமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano கூறியுள்ளது.

1888ம் ஆண்டு கர்தினால் Charles Lavigerie அவர்கள் மேற்கொண்ட ஒரு முயற்சியின் வழியே, இந்த நிதி திரட்டும் பணிகள் துவங்கின என்றும், 1890ம் ஆண்டு, திருத்தந்தை 13ம் லியோ அவர்கள் வெளியிட்ட Catholicae Ecclesiae என்ற திருமடல் வழியே இந்த முயற்சி ஐரோப்பாவின் பல நாடுகளுக்குப் பரவியது என்றும் கூறப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 8,50,000 யூரோக்கள் இந்த திருக்காட்சி பெருவிழாவன்று திரட்டப்படுகிறது என்றும், 2018ம் ஆண்டு, திரட்டப்பட்ட தொகை, ஆப்ரிக்காவின் 224 மறைமாவட்டங்களில் பல்வேறு நற்பணிகளுக்கென பகிர்ந்தளிக்கப்பட்டது என்றும் L'Osservatore Romano தன் செய்தியில் கூறியுள்ளது.

இதற்கிடையே, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், சனவரி 26, 27 ஆகிய இரு நாள்கள், அந்நாட்டின் பங்குக் கோவில்களில் திரட்டப்படும் தொகை, இலத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் கரீபியன் தீவுகளில் வாழ்வோரின் தேவைகளுக்கு அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டு திரட்டப்பட்ட 75 இலட்சம் டாலர்கள் நிதி உதவி, கரீபியன் தீவுகளை தாக்கிய புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதென்று பேரவையின் அறிக்கை கூறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 January 2019, 16:03