Myitstone நீர்த்தேக்கத்திற்கு எதிராகப் போராட்டம் Myitstone நீர்த்தேக்கத்திற்கு எதிராகப் போராட்டம் 

Myitstone நீர்த்தேக்கம், மியான்மார் மக்களுக்கு மரண தண்டனை

Myitstone நீர்த்தேக்கம் கட்டப்பட்டால், அப்பகுதியிலுள்ள அறுபது கிராமங்களின் 15 ஆயிரம் மக்கள் கட்டாயமாகப் புலம்பெயரவேண்டியிருக்கும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

மியான்மாரின் வடக்கே, கச்சின் மாநிலத்தில், Mali மற்றும் N'Mai நதிகள் சேரும் இடத்தில், Myitstone நீர்த்தேக்கம் கட்டும் சீனாவின் திட்டத்திற்கு தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார், மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ.

சீன அரசின் மின்சக்தி முதலீட்டு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில், 6,400 மெகாவாட் திட்டத்தில் அமைக்கப்படவுள்ள இந்த நீர்த்தேக்கம், மியான்மாரின் கலாச்சாரத் தொட்டிலாக அமைந்துள்ள Irrawaddy நதியைத் தடுப்பதற்குக் கட்டப்படும் முதல் நீர்த்தேக்கமாக இருக்கும் என்றும், கர்தினால் போ அவர்கள் தெரிவித்துள்ளார்.

மியான்மார் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரும், கர்தினால் போ அவர்களும் வெளியிட்டுள்ள அறிக்கையில், Myitstone நீர்த்தேக்கத்தால், தாய் நதியான Irrawaddyயை இழக்கும் ஆபத்தில் உள்ளோம், இதில் பன்னாட்டு சமுதாயம் தலையிட்டு, அத்திட்டத்தை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்த நீர்த்தேக்கம் கட்டப்பட்டால், அப்பகுதியிலுள்ள அறுபது கிராமங்களின் 15 ஆயிரம் மக்கள் கட்டாயமாகப் புலம்பெயரவேண்டியிருக்கும் என்பதால், அப்பகுதி மக்கள் அத்திட்டத்தை கைவிடுமாறு, இந்நாள்களில் மியான்மார் அரசை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.   

2011ம் ஆண்டில், மியான்மார் அரசுத்தலைவர் Thein Sein அவர்கள், சீனாவின் இத்திட்டத்தைத் தடை செய்ததால், சீனா கடுங்கோபத்தில் இருந்தது என செய்திகள் கூறுகின்றன. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 January 2019, 15:34