தேடுதல்

பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் டிசம்பர் 31ம் தேதி நடைபெற்ற கறுப்பு நசரேன் பவனி  பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் டிசம்பர் 31ம் தேதி நடைபெற்ற கறுப்பு நசரேன் பவனி  

மனிலாவில் கறுப்பு நசரேன் திருவிழா சனவரி 09

கறுப்பு நசரேன் நவநாள் செபங்களில், அரசுத்தலைவர் உட்பட, அனைத்து அரசியல் தலைவர்களுக்காகச் செபிக்குமாறு பிலிப்பைன்ஸ் ஆயர்கள் வலியுறுத்தல்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் டிசம்பர் 31ம் தேதி நடைபெற்ற நன்றிப் பேரணி மற்றும் கறுப்பு நசரேன் பக்தி நவநாள் செபங்களில், இருபதாயிரத்திற்கு அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர் என்று, தலத்திருஅவை அதிகாரிகள் கூறினர்.

சனவரி 9, வருகிற புதனன்று சிறப்பிக்கப்படும் கறுப்பு நசரேன் விழாவில், குறைந்தது இரண்டு கோடியே பத்து இலட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தலத்திருஅவை அதிகாரிகள் கூறினர்.

அதேநேரம், கறுப்பு நசரேன் நவநாள் செபங்களில், நாட்டின் அரசுத்தலைவர் உட்பட, அனைத்து அரசியல் தலைவர்களுக்காகச் செபிக்குமாறு, விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார், கறுப்பு நசரேன் பசிலிக்கா அதிபர், பேரருள்திரு Hernando Coronel.

கறுப்பு நிறத்தில், மரத்தாலான இயேசு கிறிஸ்துவின் பெரிய திருவுருவம், 1607ம் ஆண்டில், அகுஸ்தீன் சபை அருள்பணியாளர்களால், இஸ்பெயின் நாட்டிலிருந்து மனிலாவுக்குக் கொண்டுவரப்பட்டது. அதைக் கொண்டுவந்த சமயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், இத்திருவுருவம் கறுப்பு நிறமாக மாறியது என சொல்லப்படுகின்றது. 

கறுப்பு நசரேன் திருவுருவப் பவனி, கடந்த ஆண்டில் 23 மணி நேரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 January 2019, 15:34