தேடுதல்

சிரியாவிலிருந்து வெளியேற தயார் நிலையில் அமெரிக்க துருப்புகள் சிரியாவிலிருந்து வெளியேற தயார் நிலையில் அமெரிக்க துருப்புகள் 

சிரியாவின் வருங்காலம் அமைக்கப்பட உறுதியான நடவடிக்கை

சமய அடிப்படைவாதத்தை முறியடிக்க, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு உதவ வேண்டும் - அலெப்போ ஆயர்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

சிரியாவிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டுப் படைகளைத் திரும்ப அழைத்துக்கொள்வது குறித்த அறிவிப்பு, சிரியாவில் போர் முடிவதற்கான அடையாளமாக உள்ளது என்றும், இதனால், சிரியா, வருங்காலத்தை அமைப்பதற்கு, நீண்டகால மற்றும் உறுதியான தீர்மானங்களைத் தேட முடியும் என்றும், அந்நாட்டு தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

ஐ.எஸ். இசுலாமிய குழு தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள், தனது நாட்டுப் படைகளைத் திரும்பப் பெறுவதற்குத் தீர்மானித்துள்ளார்.

அரசுத்தலைவர் டிரம்ப் அவர்களின் இத்தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்துள்ள, அலெப்போ கல்தேய வழிபாட்டுமுறை ஆயர் அந்துவான் அவ்தோ அவர்கள், போர் முடிவுக்கு வருகின்றது என்ற பொதுவான எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுவதாகத் தெரிவித்தார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 December 2018, 15:41