தேடுதல்

அமெரிக்க ஆயர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அமெரிக்க ஆயர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

ஆப்ரிக்கா, இலத்தீன் அமெரிக்காவுக்கு, அமெரிக்க ஆயர்கள் உதவி

பானமாவில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் தினத்திற்கு வருகின்றவர்கள் மற்றும், இளையோர் மறைப்பணிக்கு ஆதரவாக அமெரிக்க ஆயர்கள் நிதியுதவி

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

ஆப்ரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதி நாடுகளின் மேய்ப்புப்பணி திட்டங்களுக்கு, ஏறத்தாழ 15 இலட்சம் டாலர் நிதியுதவியை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது, அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவை.

இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதி நாடுகளில் தலத்திருஅவைகளின், 173 மேய்ப்புப்பணி திட்டங்களுக்கு, 32 இலட்சம் டாலரையும், ஹெய்ட்டி மற்றும் மெக்சிகோ நாடுகளில் நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், சேதமடைந்த கட்டடங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்குமென, ஏறக்குறைய எட்டு இலட்சம் டாலரையும் வழங்குவதற்கு இசைவு தெரிவித்துள்ளது, அமெரிக்க ஆயர் பேரவை.

2019ம் ஆண்டு சனவரியில், பானமாவில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் தினத்திற்கு, ஹெய்ட்டி, பெரு, கியூபா உட்பட, பல்வேறு இலத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து செல்கின்றவர்கள் மற்றும், இளையோர் மறைப்பணிக்கு ஆதரவாக, நிதியுதவி செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆப்ரிக்காவின் உகாண்டா நாட்டில் இயற்கை குடும்ப கட்டுப்பாடு திட்டத்திற்கும், ஆப்ரிக்க மற்றும் மடகாஸ்கர் ஆயர் பேரவைகளின் கத்தோலிக்க மாணவர் இயக்கத்திற்கும், சாம்பியாவில் அருள்பணியாளரின் தலைமைத்துவம் மற்றும், சிறார் பாதுகாப்புக்கும், ஆப்ரிக்க பெரிய ஏரிகள் பகுதியில், குருத்துவ கல்லூரியில், கத்தோலிக்க கோட்பாடுகள் போதிக்கப்படுவதற்கும் நிதியுதவி வழங்குவதாக, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் ஆப்ரிக்காவுக்கு உதவும் பணிக்குழு அறிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 December 2018, 14:00