தேடுதல்

பேராயர் பத்திஸ்த்தா பிட்ஸபாலா பேராயர் பத்திஸ்த்தா பிட்ஸபாலா  

பேராயர் பிட்ஸபாலாவுக்கு, “தாமஸ் மூர்” விருது

பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த பேராயர் பிட்ஸபாலா அவர்கள், புனித பூமி காவலராகப் பணியாற்றியவர். இவர், 2016ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி, எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை அப்போஸ்தலிக்க நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை அப்போஸ்தலிக்க நிர்வாகி பேராயர் பியெர்பத்திஸ்த்தா பிட்ஸபாலா அவர்களுக்கு, 2018ம் ஆண்டின் “தாமஸ் மூர் (Tommaso Moro)” பன்னாட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.

இத்தாலியைப் பூர்வீகமாகக் கொண்டிருக்கும் பேராயர் பத்திஸ்த்தா பிட்ஸபாலா அவர்கள், கிறிஸ்தவ விழுமியங்களுக்கு, குறிப்பாக, நீதி மற்றும் அமைதிக்கு சிறப்பான முறையில் சான்று பகர்ந்து வருவதற்காக, இவ்விருது வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.    

இத்தாலியின் தெர்னி நகரிலுள்ள, கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம் (MCL), இத்தாலிய கத்தோலிக்க நீதிபதிகள் ஒன்றியம் (UGCI) ஆகிய இரண்டும் இணைந்து, இந்த பன்னாட்டு விருதை, டிசம்பர் 20, இவ்வியாழனன்று, பேராயருக்கு வழங்கியது.

இவ்விரு அமைப்புகளின் தலைவர்கள், எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை தலைமை இல்லத்திற்குச் சென்று, பேராயர் பிட்ஸபாலா அவர்களுக்கு இவ்விருதை வழங்கியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 December 2018, 15:12