லெபனான் நாட்டில், மாரனைட் வழிபாட்டுமுறையைச் சேர்ந்த புனித CHARBEL MAKHLOUF ஆலயம் லெபனான் நாட்டில், மாரனைட் வழிபாட்டுமுறையைச் சேர்ந்த புனித CHARBEL MAKHLOUF ஆலயம் 

சிரியா நாட்டினரை மீள்குடியமர்த்தும் முயற்சிகள்

சிரியாவிலிருந்து லெபனான் நாட்டிற்குள் புலம் பெயர்ந்தோரை, உடனடியாக, மீண்டும் தங்கள் சொந்த நாட்டில் மீள்குடியமர்த்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் - லெபனான் ஆயர்கள்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

சிரியாவில் இடம்பெற்றுவரும் போருக்கு அரசியல் முறையில் தீர்வு காணப்படும்வரை காத்திராமல், அந்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தோரை, உடனடியாக, மீண்டும் அந்நாட்டில் மீள்குடியமர்த்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று, லெபனான் மாரனைட் கத்தோலிக்க வழிபாட்டு முறை ஆயர்கள் கூறியுள்ளனர்.

2011ம் ஆண்டிலிருந்து, சிரியாவை அதிகத் துன்பங்களுக்கு உள்ளாக்கியிருக்கும் இப்போரினால், பத்து இலட்சத்திற்கும் அதிகமான சிரியா நாட்டினர், லெபனான் நாட்டில் புலம் பெயர்ந்துள்ளனர்.

இம்மக்களால், லெபனான் நாடு எதிர்கொள்ளும் பொருளாதார, மற்றும் பாதுகாப்பு சுமைகளை, இனியும் தொடர்ந்து தாங்கிக்கொண்டிருக்க இயலாது என்று, ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

சிரியாவிலிருந்து புலம்பெயர்ந்தோர், தங்கள் சொந்த இடங்களுக்கு, பாதுகாப்பாகத் திரும்புவதற்கு, எவ்வித தடைகளும் இருக்கக்கூடாது எனவும், லெபனான் ஆயர்கள் தங்கள் அண்மைக் கூட்டம் ஒன்றில் கூறியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 December 2018, 15:35