பிரான்ஸின் "மஞ்சள் ஜாக்கெட்" போராட்டத்தில் பங்கு பெறுவோருள் ஒரு பகுதியினர் பிரான்ஸின் "மஞ்சள் ஜாக்கெட்" போராட்டத்தில் பங்கு பெறுவோருள் ஒரு பகுதியினர் 

பிரான்சில் கலந்துரையாடலுக்கு ஆயர்கள் அழைப்பு

பிரான்சில், எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து இடம்பெற்றுவரும் வன்முறை போராட்டங்களுக்கு, கலந்துரையாடல் வழியாக தீர்வு காணுமாறு, ஆயர்கள் அழைப்பு

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

பிரான்ஸ் நாட்டில், நடைபெற்றுவரும் அரசுக்கெதிரான "மஞ்சள் ஜாக்கெட்" எனப்படும் போராட்டத்தில் இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிரான கண்டனத்தை வெளியிட்டுள்ளவேளை, இப்போராட்டத்திற்குக் காரணமான பொருளாதார நிலைகள் குறித்த கவலையையும் தெரிவித்துள்ளனர், அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள்.

பிரான்ஸ் நாட்டில், எரிபொருள் விலை, கடந்த 12 மாதங்களில் 23 விழுக்காடுவரை உயர்ந்துள்ளதே இந்த போராட்டத்துக்குக் காரணம் எனவும், இரண்டாயிரமாம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து எரிபொருள் விலை, இந்த அளவு அதிகரித்துள்ளது இதுவே முதல்முறை எனவும் கூறப்படுகின்றது.

எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து, பிரான்சில் இடம்பெற்றுவரும் வன்முறை போராட்டங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர்கள், கலந்துரையாடல் வழியாக, பிரச்சனைக்குத் தீர்வு காணுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். 

இதற்கிடையே, இந்தப் போராட்டம் மேலும் தீவிரமாகும் என்ற அச்சத்தில், இச்சனிக்கிழமையன்று, பாரிசிலுள்ள உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் வாகனங்கள் பழுதானால் பயன்படுத்துவதற்கு வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கருவிகளுடன், ஓட்டுநர்கள் மஞ்சள் ஜாக்கெட்டுகளையும் வைத்திருக்க வேண்டும். வாகனம், சாலையில் பழுதடைந்தால் சிவப்பு நிறத்தில் முக்கொம்பு வடிவ தடுப்பு வைக்கப்படுவதைப்போல், ஓட்டுநர்கள் இந்த மஞ்சள் ஜாக்கெட்டுகளை அணிந்திருக்க வேண்டும். இது தொலைதூரத்தில் வருபவர்களுக்கு தெளிவாகத் தெரியக்கூடிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். மஞ்சள் ஜாக்கெட்டுகளை அணிய தவறினால் அபராதம் விதிக்கப்படும் சட்டம் 2008ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 December 2018, 14:48