தேடுதல்

வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் மணலில் செதுக்கப்பட்டுள்ள கிறிஸ்து பிறப்பு காட்சி வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் மணலில் செதுக்கப்பட்டுள்ள கிறிஸ்து பிறப்பு காட்சி 

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா – சிறப்பு நிகழ்ச்சி

தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது யூதநிலத்தினிலே; சத்திய வேதம் நின்று நிலைத்தது தாரணி மீதினிலே; எத்தனை உண்மைகள் வந்து பிறந்தது இயேசு பிறந்ததிலே (இயேசு காவியம்)

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது யூதநிலத்தினிலே

சத்திய வேதம் நின்று நிலைத்தது தாரணி மீதினிலே

எத்தனை உண்மைகள் வந்து பிறந்தது இயேசு பிறந்ததிலே

இத்தனை நாளும் மானிடன் வாழ்வது இயேசுவின் வார்த்தையிலே

இயேசுவின் பிறப்பிலே எத்தனையோ உண்மைகள் வந்துபிறந்தன (இயேசு காவியம்)

எம் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும், இனிய கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள். கிறிஸ்மஸ் மகிழ்வின் விழா. இப்பெருவிழா நாளில், அனைவர் மனதிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்

கிறிஸ்மஸ் அமைதியின் விழா, சமாதானத்தின் விழா. இறைஇயேசு வழங்கும் அமைதி எனும் கொடை, பாரினர் அனைவரின் மனதில் என்றும் நிலைக்கட்டும். உடைந்த உறவுகள் ஒன்றிணையட்டும். 

கிறிஸ்மஸ் அன்பின் விழா. கடவுளுடைய அன்புக்கு எடுக்கப்படும் விழா. மனிதர் அனைவர் மீதும் கொண்ட அன்பால், இறைவன் தம் மகனை மனித உருவில் தோன்றச் செய்தார். தம் மகன் இயேசு வழியாக தம் அன்பை வெளிப்படுத்தினார். எனவே இந்த நாளில் நம் இதயங்கள் அனைவரோடும் அன்புறவில் வாழட்டும். அன்புக்காக ஏங்கும் உள்ளங்களில் அன்பை அள்ளி வழங்கட்டும்.   

கிறிஸ்மஸ் இறை பிரசன்னத்தின் பெருவிழா. கடவுள் நம்மோடு இருக்கின்றார் என்ற ஆறுதலின் செய்தியை, மகிழ்ச்சியின் செய்தியை நமக்குத் தரும் விழா

கிறிஸ்மஸ் ஒளியின் விழா. உலகிற்கு ஒளியாக உதித்தார் இயேசு. இந்நாளில் இருளான மனங்களில் இயேசுவின் ஒளி வீசட்டும்.

அன்பர்களே, கிறிஸ்மஸ் விழா, நமக்குத் தருகின்ற ஆழமான, அர்த்தம் நிறைந்த உண்மைகளை மனதில் நிறுத்துவோம்

இப்புனித நாளில் எது எது நம்மைப் பிரிக்குமோ அவற்றை மறப்போம்; எவை எவை நம்மை இணைக்குமோ அவற்றை நினைப்போம்.

கிறிஸ்மஸ் செய்தி வழங்குகிறார், அருள்பணி யூஜின் லூர்துசாமி, திருச்சி மறைமாவட்டம்.

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா - சிறப்பு நிகழ்ச்சி

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 December 2018, 12:01