அல்ஜீரியா நாட்டில் மறை சாட்சிகளாக உயிர் துறந்த துறவியர் அல்ஜீரியா நாட்டில் மறை சாட்சிகளாக உயிர் துறந்த துறவியர் 

டிசம்பர் 8, அல்ஜீரியாவின் மறைசாட்சிகள் அருளாளர்களாக...

அல்ஜீரியா நாட்டில் மறை சாட்சிகளாக உயிர் துறந்த 19 துறவியரை அருளாளர்களாக உயர்த்தும் திருப்பலியை நிறைவேற்ற, திருத்தந்தையின் சார்பில் செல்லும் கர்தினால் ஆஞ்செலோ பெச்சு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல என்று நான் உங்களுக்குக் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள்" (யோவான் 15:20) என்று இயேசு தன் சீடர்களிடம் கூறிய சொற்கள், இன்றும் நம்மிடையே நிஜமாகி வருகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் ஒருவருக்கு அனுப்பிய மடலில் கூறியுள்ளார்.

அல்ஜீரியா நாட்டில் மறை சாட்சிகளாக உயிர் துறந்த 19 துறவியரை அருளாளர்களாக உயர்த்தும் திருப்பலியை நிறைவேற்ற, திருத்தந்தையின் சார்பில் செல்லும் கர்தினால் ஆஞ்செலோ பெச்சு அவர்களுக்கு, திருத்தந்தை எழுதியுள்ள மடலில், இவ்வாறு கூறியுள்ளார்.

டிசம்பர் 8, இச்சனிக்கிழமை சிறப்பிக்கப்படும் அமல அன்னை மரியாவின் திருநாளன்று, அல்ஜீரியா நாட்டின் ஓரான் (Oran) நகரில் அமைந்துள்ள Notre-Dame de Santa Cruz திருத்தலத்தில் நிகழும் திருப்பலியை, புனிதர் பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் பெச்சு அவர்கள், நிறைவேற்றுவார்.

ஓரான் மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றி, பின்னர், மறைசாட்சியாக உயிர் துறந்த, தொமினிக்கன் துறவு சபையைச் சேர்ந்த ஆயர், Peter Lucian Claverie அவர்கள் உட்பட, 19 துறவியர், இத்திருப்பலியில் அருளாளர்களாக உயரத்தப்படுகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 December 2018, 15:28