தமிழ்நாட்டிலிருந்து மும்பையில் குடியேறியுள்ள தலித் மக்களுடன் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடிய கர்தினால் கிரேசியஸ் தமிழ்நாட்டிலிருந்து மும்பையில் குடியேறியுள்ள தலித் மக்களுடன் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடிய கர்தினால் கிரேசியஸ் 

தலித் மக்களுடன் கிறிஸ்மஸ் கொண்டாடிய கர்தினால் கிரேசியஸ்

இந்திய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் கிரேசியஸ் அவர்கள், தமிழ்நாட்டிலிருந்து மும்பையில் குடியேறியுள்ள தலித் மக்களுடன் கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாடினார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மும்பைப் பேராயரும், இந்திய ஆயர் பேரவையின் தலைவருமான கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்கள், தமிழ்நாட்டிலிருந்து மும்பையில் குடியேறியுள்ள தலித் மக்களுடன் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடினார் என்று ஆசிய செய்தி கூறியுள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து மும்பையில் உள்ள திராம்பே (Trombay) சேரிப் பகுதியில் வாழ்ந்து வரும் 21 குடும்பங்களைச் சேர்ந்த 88 பேருடன், கர்தினால் கிரேசியஸ் அவர்கள் கிறிஸ்மஸ் நாள் காலை வேளையைச் செலவிட்டார்.

பழங்குடியினர், சாலைகளில் உள்ள குப்பைகளில் பொருள்களைச் சேகரிப்போர், மற்றும், தீ விபத்துக்களில் வீடுகளை இழந்தோர் என்ற பல்வேறு குழுக்களுடன் கர்தினால் கிரேசியஸ் அவர்கள், கடந்த ஆண்டுகளில், கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைக் கொண்டாடியுள்ளார் என்று ஆசிய செய்தி மேலும் கூறுகிறது.

தலித் கிறிஸ்தவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் வகையில், இந்திய ஆயர் பேரவை, ஒவ்வோர் ஆண்டும், நவம்பர் 2ம் ஞாயிறை, தலித் விடுதலை ஞாயிறென சிறப்பிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 December 2018, 14:40