பூர்வீக இன மக்கள் பூர்வீக இன மக்கள் 

இயேசு பூர்வீக இனத்தவரின் காயங்களில் இருக்கின்றார்

சமூகத்தில் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களிடம் சென்று அவர்களுக்கு நம்பிக்கையை அளிப்பதும், புதிய சமூக நியதியைக் கொண்டுவரும் பணிகளில் ஈடுபடுவதும் நவீன திருஅவையின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

நம் பூர்வீக இன மற்றும் சமூகத்தில் புறந்தள்ளப்பட்ட மக்களின் சதைகளிலும், காயங்களிலும், மனப்புண்களிலும், ஒவ்வொரு நாளும் நாம் இயேசுவை சந்திக்கின்றோம் என்று, இந்திய தலத்திருஅவை உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

நவம்பர் 18, இஞ்ஞாயிறன்று அகிலத் திருஅவையில் சிறப்பிக்கப்படும் இரண்டாவது உலக வறியோர் நாளையொட்டி ஆசியச் செய்திக்குப் பேட்டியளித்த, மும்பை உயர்மறைமாவட்ட பேராயரும், இந்திய ஆயர் பேரவைத் தலைவருமான கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.

மும்பை மாநகருக்கு ஏறத்தாழ 200 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற Raigad பூர்வீக இன மக்களில், ஏழைகளை நாம் சந்திக்கின்றோம் என்றும், இம்மக்களைச் சந்தித்து இவர்களோடு செபித்து, உணவளிப்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாளும் அவர்களை சந்தித்து முன்னேற்றுவதற்கு முயற்சிக்கிறோம் என்றும் கூறினார், கர்தினால்   ஆசுவால்டு கிரேசியஸ்.

“இந்த ஏழை கூவியழைத்தான், ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்” என்ற தலைப்பில், இரண்டாவது உலக வறியோர் நாள் சிறப்பிக்கப்படுகின்றது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 November 2018, 14:57