தேடுதல்

Vatican News
அமெரிக்க ஐக்கிய நாட்டு  ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் டேனியல் டி நார்டோ அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் டேனியல் டி நார்டோ  (AFP or licensors)

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் பேரவையின் ஆண்டு கூட்டம்

பாலியல் தொடர்பான புகார்கள் குறித்தவற்றில், அமெரிக்க ஐக்கிய நாட்டு தலத்திருஅவையின் நிலைப்பாட்டை மக்களுக்கு வெளிப்படுத்த, ஆயர்களின் கூட்டு முயற்சி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டுகள் எழும்போது, அவற்றில் ஆயர்களின் பொறுப்பு என்ன என்பதைக் குறித்தும், ஆயர்களுக்கு எதிராக எழும் குற்றச்சாட்டுகளைப் பெறுவதற்கு சிறப்புக் குழு உருவாக்குவது குறித்தும் ஆய்வு செய்யும் நோக்கத்தில், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை, விவாதங்களை மேற்கொண்டுள்ளது.

இத்திங்களன்று துவங்கியுள்ள இந்த மூன்று நாள் கூட்டம், பாலியல் தொடர்பான புகார்கள் குறித்தவற்றில், தலத்திருஅவையின், குறிப்பாக, ஆயர்களின் நிலைப்பாட்டை மக்களுக்கு வெளிப்படுத்துவதாக இருக்கும் என்று, ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் டேனியல் டி நார்டோ அவர்கள் கூறினார்.

திருஅவை அதிகாரிகளின் பாலியல் குற்றங்கள் குறித்தும், அவை சமுதாயத்தில் ஏற்படுத்தியுள்ள எதிர்மறைத் தாக்கங்களைக் குறித்தும் கருத்துப் பரிமாற்றங்களும், செபங்களும் மேற்கொள்ளப்படும் இக்கூட்டம், தன் முடிவுகளை வெளியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, இத்தீர்மானங்கள் மீது, ஆயர்களின் வாக்கெடுப்பு, உடனடியாக மேற்கொள்ளப்படாமல், வத்திக்கானில் 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் அனைத்துலக ஆயர் பேரவைகளின் பிரதிநிதிகள் கூட்டத்தையடுத்து, அடுத்த மார்ச் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

13 November 2018, 15:58