சீன கத்தோலிக்கர் சீன கத்தோலிக்கர் 

மறைந்து வாழும் அருள்பணியாளரை வரவேற்போருக்கு தண்டனை

சீன அரசின் கீழ் செயல்படும் கத்தோலிக்க சபையில் இணையும்படி கட்டாயப்படுத்தப்பட்டு, தடுப்புக் காவலில் இரு அருள்பணியாளர்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தைக்கு விசுவாசமாக இருப்பதால், சீனாவின் ஹெபெய் மாவட்டத்தில் மறைந்து வாழும், இரு அருள்பணியாளர்கள், சீன அரசால், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக UCA செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

Xuanhua மறைமாவட்டத்தைச் சேர்ந்த இந்த இரு அருள்பணியாளர்களும், சீன அதிகாரிகளால் எடுத்துச் செல்லப்பட்டு, மத விவகாரங்கள் குறித்த புதிய விதிமுறைகளைப் படிக்கும்படியும், அரசின் கீழ் செயல்படும் கத்தோலிக்க சபையில் இணையும்படியும் கட்டாயப்படுத்தப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, Xuanhua மறைமாவட்டத்தின் கிராமம் ஒன்றை அணுகிய சீன அதிகாரிகள், அருள்பணியாளர்களை வீட்டிற்குள் வரவேற்கும் குடும்பங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும், ஐந்து நாட்கள் தடுப்புக் காவல் தண்டனை வழங்கப்படும் எனவும் எச்சரித்துள்ளதாக நம்பத்தகும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 November 2018, 16:43