நிலையான அரசை வலியுறுத்தி இலங்கை சனநாயக ஆதரவு ஆர்வலர்கள் நிலையான அரசை வலியுறுத்தி இலங்கை சனநாயக ஆதரவு ஆர்வலர்கள் 

அரசியல் சண்டை தீர்க்கப்பட இலங்கை சமயத் தலைவர்கள்

இலங்கையில் எழுந்துள்ள அரசியலமைப்பு சார்ந்த பிரச்சனையை, சட்டத்துறையினர் தீர்த்து வைக்க அழைப்பு

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

இலங்கையின் சனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும், தற்போதைய கசப்பான அரசியல் பிரச்சனை முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்று, அந்நாட்டு சமயத் தலைவர்கள், நவம்பர் 23, இவ்வெள்ளியன்று அழைப்பு விடுத்துள்ளனர்.  

இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், தலைமையிலான பல்சமயத் தலைவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் இடம்பெறும் அரசியலமைப்பு பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு, சட்டம், ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட வேண்டியது இன்றியமையாதது என்று குறிப்பிட்டுள்ளனர். 

தாங்கள்தான், நாட்டின் சட்டமுறைப்படியான பிரதமர்கள் என, இருவர் கூறிவருவதையொட்டி எழுந்துள்ள அரசியலமைப்பு சார்ந்த பிரச்சனையை, நாட்டின் சட்டத்துறையினர் தீர்த்து வைக்குமாறும், சமயத் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மக்களின் வளர்ச்சி மற்றும் நல்வாழ்வை மட்டுமே கருத்தில்கொண்டு அமைக்கப்படும் சிறந்த அரசு நிர்வாகத்திற்கு உறுதியளித்து, மக்களவையில் அரசியல்வாதிகள் நுழைய வேண்டுமென்றும், அத்தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கை அரசுத்தலைவர் மைத்திரிபால ஸ்ரீசேனா அவர்கள், கடந்த அக்டோபர் 26ம் தேதி, பிரதமர் இரணில் விக்ரமசிங்கே அவர்களை, எதிர்பாராத விதமாக நீக்கியதைத் தொடர்ந்து அரசியல் பிரச்சனை வெடித்துள்ளது. 

இந்த அறிக்கையில், புத்தமதத் தலைவர்கள், Ittepane Dhammalankara Thero, Kotugoda Dhamawasa Thero, ஆயர் Winston Fernando ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 November 2018, 15:36