தேடுதல்

நவம்பர் 11, தலித் மக்களின் விடுதலை ஞாயிறு குறித்த தகவல் படம் நவம்பர் 11, தலித் மக்களின் விடுதலை ஞாயிறு குறித்த தகவல் படம் 

நவம்பர் 11, தலித் மக்களின் விடுதலை ஞாயிறு

இந்தியாவில், கத்தோலிக்கர்களும், ஏனைய கிறிஸ்தவர்களும் இணைந்து, நவம்பர் 11, வருகிற ஞாயிறை, தலித் மக்களின் விடுதலை ஞாயிறென சிறப்பிக்கின்றனர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில், கத்தோலிக்கர்களும், ஏனைய கிறிஸ்தவர்களும் இணைந்து, நவம்பர் 11, வருகிற ஞாயிறை, தலித் மக்களின் விடுதலை ஞாயிறென சிறப்பிக்கின்றனர்.

இந்திய ஆயர் பேரவையின், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பணிக்குழுவும், இந்திய கிறிஸ்தவ சபைகளின் தேசிய அவையும் இணைந்து கடைபிடிக்கும் இந்த ஞாயிறு நிகழ்வுகளில், ஆர்த்தடாக்ஸ் சபையினரும் இணைகின்றனர்.

2007ம் ஆண்டு முதல், நவம்பர் மாதத்தின் இரண்டாம் ஞாயிறன்று தலித் மக்களின் விடுதலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும், இவ்வாண்டு, ஒடிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் நிகழ்ந்த கொடுமைகளின் 10ம் ஆண்டு நினைவும் இணைந்து சிறப்பிக்கப்படுகிறது என்றும் இந்திய ஆயர் பேரவையின், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பணிக்குழு அறிவித்துள்ளது.

திருஅவை, மற்றும் கிறிஸ்தவ சபைகளுக்குள்ளும், வெளி உலகில் அரசு மற்றும் சமுதாயத்தாலும் தலித் மக்கள் அனுபவிக்கும் பாகுபாடுகளை எதிர்த்து, கடைபிடிக்கப்படும் தலித் மக்களின் விடுதலை ஞாயிறுக்கு, இவ்வாண்டு, "நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்" என்ற மையக்கருத்து தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 November 2018, 15:15