சோதனை பதிப்பு

Cerca

Vatican News
இறைவா உமக்கே புகழ் என்ற திருமடல் குறித்த கருத்தரங்கு இறைவா உமக்கே புகழ் என்ற திருமடல் குறித்த கருத்தரங்கு 

நேர்காணல் – கிறிஸ்துவே படைப்பனைத்திலும் தலைப்பேறு, பாகம் 2

சேலம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி லியோ வில்லியம் அவர்கள், கோட்பாட்டு இறையியலில், முனைவர் பட்டம் பெற்றிருப்பவர். இறைவனோடும், இயற்கையோடும் மனிதர் ஒப்புரவாகவில்லையென்றால், பெரும் அழிவைச் சந்திக்க நேரிடும் என தன் ஆய்வில் சொல்லியிருக்கிறார், அருள்பணி லியோ வில்லியம்

மேரி தெரேசா – வத்திக்கான்

‘கிறிஸ்துவே படைப்பனைத்திலும் தலைப்பேறு, இறைவா உமக்கே புகழ் என்ற திருமடலின் கிறிஸ்தியல் பார்வை’ என்ற தலைப்பில், அருள்பணி லியோ வில்லியம் அவர்கள், தனது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கட்டுரையின் முதல்பகுதியில், இயற்கை, இறைவன், மனிதன் ஆகிய மூவரும் ஒன்றுபட்டு உறவாடிக்கொண்டிருக்க வேண்டும் என்ற முக்கியத்துவத்தை சொல்லியுள்ளார். இறைவனுக்கும், இயற்கைக்கும் இருக்கின்ற உறவை இன்றைய காலக்கட்டத்தில் நாம் சிந்தித்து செயல்பட வேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருப்பதை, இரண்டாவது பகுதியில், இவர் ஆய்வு செய்துள்ளார். இவ்வாறு இந்த ஆய்வுக்கட்டுரையின் முதல் நான்கு பிரிவுகளில் அருள்பணி லியோ வில்லியம் அவர்கள் கூறியதை கடந்த வார நிகழ்ச்சியில் கேட்டோம். அதைத் தொடர்ந்து இன்று...

நேர்காணல் – அ.பணி. லியோ வில்லியம்
01 November 2018, 08:56