தேடுதல்

Vatican News
தீபாவளி கொண்டாட்டங்கள் தீபாவளி கொண்டாட்டங்கள்  (AFP or licensors)

வாரம் ஓர் அலசல் - தீபாவளியும் இளையோரும்

தன்னார்வலர் அமைப்பு இளைஞர்கள் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் பெரியவர்களோடு தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்

மேரி தெரேசா &அ.சகோ.ரெக்சிட்டா – வத்திக்கான்

மதுரையை மையமாகக் கொண்டு செயல்படும், படிக்கட்டுகள்' என்னும் இளையோர் தன்னார்வலர்கள் அமைப்பின், தமிழகத்தின் பல நகரங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், மற்றும், ஐ.டி. உட்பட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் இளையோர் ஒன்று சேர்ந்து ஆதரவற்ற குழந்தைகள், ஆதரவற்ற விடுதி மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் போன்ற, எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். தீபாவளி, இரமதான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளை, இவர்களுடன் சேர்ந்து கொண்டாடி வருகிறார்கள். தங்களுடைய ஊதியத்திலிருந்து ஒரு பகுதியை இதற்காகச் செலவு செய்கிறார்கள். எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தீபாவளிக்கு புத்தாடைகள் வழங்க வாட்ஸ் அப், முகநூலில் வேண்டுகோள் வைத்தும், துணிக்கடை ஒன்றின் வாசலில், ஒரு நன்கொடை பெட்டி வைத்தும், புத்தாடைகள் நிதி சேகரித்துள்ளார்கள். அந்த வகையில் தீபாவளியை வித்தியாசமான முறையில், ஆக்கப்பூர்வமாகக் கொண்டாட எண்ணிய படிக்கட்டுகள் அமைப்பினர், காப்பகக் குழந்தைகளை துணிக்கடைகளுக்கே அழைத்துச் சென்று, அவர்கள் விரும்பிய புத்தாடைகளை எடுத்துக் கொடுத்துள்ளனர். மேலும், இலங்கையின் வவுனியாவில் உள்ள தமிழ் இளைஞர்கள், இரத்ததானம் செய்து தீபாவளி கொண்டாடியுள்ளனர். வவுனியா அரசு மருத்துவமனை இரத்த வங்கியில், இரத்தம் பற்றாக்குறை இருப்பதை அறிந்த இந்த இளைஞர்கள், இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இவ்வாறு கடந்த சில ஆண்டுகளில் தமிழ் இளையோர் தீபாவளியை அரத்தமுள்ள முறையில் கொண்டாடியுள்ளனர். நவம்பர், 06 இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்படும் இவ்வாண்டு தீப ஒளி விழாவையும், இளையோர் மேலும் பல சமூகநலப் பணிகளால் சிறப்பிப்பார்கள் என நம்புகின்றோம்.

இந்த தீபங்களின் விழா பற்றிச் சொல்கிறார், அ.சகோ.ரெக்சிட்டா, மரியின் ஊழியர் சபை, திருச்சி

தீபாவளியும் இளையோரும்
05 November 2018, 13:09