தேடுதல்

மத்திய ஆப்ரிக்க குடியரசின் கலவரங்களைக் கட்டுப்படுத்தும் ஐ.நா. படை வீரர்கள் மத்திய ஆப்ரிக்க குடியரசின் கலவரங்களைக் கட்டுப்படுத்தும் ஐ.நா. படை வீரர்கள் 

மத்திய ஆப்ரிக்க குடியரசுக்காக செபம்

வன்முறை தொடர்ந்து இடம்பெற்றுவரும் மத்திய ஆப்ரிக்க குடியரசு மக்களுக்காகச் செபிக்குமாறு தலத்திருஅவை அதிகாரிகள் அழைப்பு

மத்திய ஆப்ரிக்க குடியரசுக்காக செபம்

 

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

வன்முறை தொடர்ந்து இடம்பெற்றுவரும் மத்திய ஆப்ரிக்க குடியரசில், புலம்பெயர்ந்த மக்களுக்கு கத்தோலிக்க திருஅவை நடத்திவரும் மையம் தாக்கப்பட்டுள்ளது என்றும், Alindao நகரில், பேராலயத்தையும், ஆயரின் இல்லத்தையும், போராளிகள் குறிவைத்துள்ளனர் என்றும் வத்திக்கான் செய்திகள் கூறுகின்றன. 

Alindao நகரிலுள்ள புலம்பெயர்ந்தோர் முகாமை இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்கியதில் நாற்பதுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.

Abinao மறைமாவட்டம் நடத்துகின்ற புலம்பெயர்ந்தோர் முகாமில், இனம், மதம் வேறுபாடின்றி 25 ஆயிரம் பேருக்கு அடைக்கலம் தரப்பட்டுள்ளது எனவும், 2015ம் ஆண்டில் திருத்தந்தை அந்நாட்டிற்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, நாட்டில் சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கு திருஅவை கடுமையாய் உழைத்து வருகின்றது எனவும் செய்திகள் கூறுகின்றன.

இதற்கிடையே, அந்நாட்டில் வன்முறை தொடர்ந்து இடம்பெற்றுவருவதால், நாட்டின் 45 இலட்சம் மக்களில் 6,90,000க்கு மேற்பட்ட மக்கள், நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்துள்ளனர் என்றும், 5,70,000 பேர், அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்றும், எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற அமைப்பு கூறியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 November 2018, 15:01