தேடுதல்

மத்திய ஆப்ரிக்க குடியரசில் ஐ.நா. அமைதி காப்பாளர்கள் மத்திய ஆப்ரிக்க குடியரசில் ஐ.நா. அமைதி காப்பாளர்கள் 

மத்திய ஆப்ரிக்க குடியரசில் கொல்லப்பட்டவர்களுக்கு செப நாள்

ஆப்ரிக்காவில் மக்களுக்காக உழைக்கும் தலத்திருஅவை அதிகாரிகள் கட‌த்தப்பட்டாலும், கொலைச் செய்யப்பட்டாலும், பணிகள் தொடர்கின்றன‌

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மத்திய ஆப்ரிக்க குடியரசில் அநீதியாக கொல்லப்பட்டவர்களுக்கு செபிக்கும் நாளாக, வரும் ஞாயிறை சிறப்பிக்க வேண்டும் என விண்ணப்பித்துள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.

2012ம் ஆண்டிலிருந்து பல்வேறு துன்ப நிலைகளை சந்தித்துவரும் மத்திய ஆப்ரிக்க குடியரசின் குடும்பங்களை மனதில் கொண்டு, நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரிகளும், அரசியல் தூதர்களும், நாடுகள் மற்றும் அனைத்துலக அமைப்புகளின் பிரதிநிதிகளும், சமூகத் தொடர்பாளர்களும், பொதுமக்களும் செயல்பட வேண்டும் என விண்ணப்பித்துள்ள மத்திய ஆப்ரிக்க குடியரசின் ஆயர்கள், டிசம்பர் மாதம் 2ம் தேதி ஞாயிறை, செபத்தின் நாளாக சிறப்பிக்க வேண்டும் என விண்ணப்பித்துள்ளனர்.

இதற்கிடையே, ஆப்ரிக்காவின் கேமரூன் நாட்டில், கிளரியேசன் துறவுச் சபையைச் சேர்ந்த 3 மறைப் பணியாளர்கள், கடந்த சனிக்கிழமையன்று அடையாளம் தெரியாத மனிதர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

கேமரூனின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள Muyenge எனுமிடத்தில் அமைந்துள்ள ஒரு பங்குதளத்தில் பணியாற்றச் சென்ற வழியில், இரு அருள்பணியாளர்களும், ஒரு அருள்சகோதரரும் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இம்மாதம் 21ம் தேதி, புதனன்று, மற்றொரு மறைப்பணியாளர் Cosmos Omboto Ondari என்பவர் கொலைச் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 November 2018, 15:12