தேடுதல்

பாகிஸ்தான் காரித்தாஸ் மரம் நடும் திட்டத்தில் சிறார் பாகிஸ்தான் காரித்தாஸ் மரம் நடும் திட்டத்தில் சிறார் 

ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலுக்கு பாகிஸ்தான் காரித்தாஸ் ஆதரவு

பாகிஸ்தானில் 2019ம் ஆண்டுக்குள் பத்து இலட்சம் மரக்கன்றுகள் நடும் இத்திட்டம் – பாகிஸ்தான் காரித்தாஸ்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானில் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் திட்டத்திற்கு ஆதரவாக, அந்நாட்டு கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, பத்து இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளது.

ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் குறித்த கத்தோலிக்கத் திருஅவையின் சமூகக் கோட்பாடுகளைச் செயல்படுத்தும் நோக்கத்தில், பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பு, 2016ம் ஆண்டில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஆரம்பித்தது.

ஆரம்ப பள்ளி மாணவர்களைக் கொண்டு பத்து இலட்சம் மரக்கன்றுகள் நடும் இத்திட்டம் 2019ம் ஆண்டில் நிறைவடையும் என்றும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே ஏழு இலட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்றும் ஆசியச் செய்தி கூறுகின்றது.

உலகில் அதிகம் மாசு கேடடைந்த பத்து நகரங்களில், பாகிஸ்தானின் லாகூர், கராச்சி ஆகிய இரு நகரங்களும் இடம் பெற்றுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

அந்நாட்டில் 2025ம் ஆண்டுக்குள் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் எனவும், ஏறத்தாழ இரண்டு கோடியே பத்து இலட்சம் மக்கள் குடி நீர் வசதியின்றி உள்ளனர் எனவும் செய்திகள் கூறுகின்றன. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 November 2018, 15:12