ஹையான் புயலால் உயிரிழந்தோருக்கு நினைவுச் சின்னம் ஹையான் புயலால் உயிரிழந்தோருக்கு நினைவுச் சின்னம் 

காரித்தாஸின் 6 கோடியே 10 இலட்சம் டாலர்கள் நிதி உதவி

ஹையான் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்கு, 6 கோடியே 10 இலட்சம் டாலர்கள் நிதி திரட்டி, 14 இலட்சம் மக்களுக்கு உதவி வருகிறது, கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு

காரித்தாஸின் 6 கோடியே 10 இலட்சம் டாலர்கள் நிதி உதவி

 

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

2013ம் ஆண்டு, பிலிப்பீன்ஸ் நாட்டில் வீசிய ஹையான் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்கு, 6 கோடியே 10 இலட்சம் டாலர்கள் நிதி திரட்டி, 14 இலட்சம் மக்களுக்கு உதவி வருகிறது, கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.

34 இலட்சத்து, 24 ஆயிரம் குடும்பங்களை பாதித்த ஹையான் புயலால், வீடுகளை இழந்த மக்களுக்கு 30,000த்திற்கும் அதிகமான வீடுகளை கட்டிக்கொடுத்துள்ள காரித்தாஸ் அமைப்பு, 2014ம் ஆண்டிலிருந்து, 14 இலட்சம் மக்களின் வாழ்க்கை நிலையை மாற்றியமைத்துள்ளது.

மக்களுக்குத் தேவையான, தங்குமிடம், வாழ்வதற்குத் தேவையான பொருள்கள், தண்ணீர், நலவாழ்வு ஆதரவு, சுற்றுச்சூழல் மீட்புப்பணிகள் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி, கடந்த நான்காண்டுகளில், காரித்தாஸ் அமைப்பு, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் கத்தோலிக்க துயர் துடைப்பு அமைப்பான CRS, இத்தாலி, பெல்ஜியம், ஜெர்மனி, ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் தேசிய காரித்தாஸ் அமைப்புக்கள் ஆகியவை இணைந்து, பிலிப்பீன்ஸ் நாட்டிற்கு இத்திட்டத்தின் வழியே உதவியுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 November 2018, 15:46