தேடுதல்

குடிபெயர்ந்தோருடன் பயணத்தைப் பகிர்வோம் என்ற முயற்சியில் கர்தினால் தாக்லே குடிபெயர்ந்தோருடன் பயணத்தைப் பகிர்வோம் என்ற முயற்சியில் கர்தினால் தாக்லே 

கர்தினால் தாக்லே வெளியிட்ட திருவருகைக்கால செய்தி

இயேசுவை தன் உதரத்தில் தாங்கிய அன்னை மரியாவும், அவரது கணவர் யோசேப்பும், குழந்தை பிறப்பதற்கு முன்பும், பிறந்த பின்னரும் புலம்பெயர்ந்தோராக பயணித்தனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இன்றைய உலகின் கண்ணோட்டத்தைக் கொண்டு இயேசுவின் வாழ்வை நாம் நோக்கும்போது, இயேசுவை, தோல்வியடைந்தவர் என்றே சொல்லத்தோன்றுகிறது என்று, அனைத்துலக கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் கூறியுள்ளார்.

அண்மித்து  வரும் திருவருகைக் காலத்தையொட்டி கர்தினால் தாக்லே அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், இந்த கிறிஸ்மஸ் காலத்தில், உள்ளங்களை விரிவாக்கி, அனைவரோடும் பயணத்தைப் பகிர்வதற்கு நாம் தயாராக இருப்போமாக என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இயேசுவை தன் உதரத்தில் தாங்கிய அன்னை மரியாவும், அவரது கணவர் யோசேப்பும், குழந்தை பிறப்பதற்கு முன்பும், பிறந்த பின்னரும், புலம்பெயர்ந்தோராக பயணித்தனர் என்பதை, தன் மடலில் குறிப்பிட்டுள்ள கர்தினால் தாக்லே அவர்கள், திருக்குடும்பத்தின் பயணத்தில் பங்கேற்க வேண்டுமெனில், தற்போது புலம்பெயர்ந்தோர் மேற்கொள்ளும் கடுமையான பயணங்களில் பங்கேற்போமாக என்று கூறியுள்ளார்.

எளிமையாகப் பிறந்து, சிலுவையில் இறந்த இயேசுவின் வாழ்வு, தோல்வியுற்றவர் ஒருவரின் வாழ்வாகத் தோன்றினாலும், வறியோரையும், வாழ்வின் விளிம்பில் வாழ்வோரையும் காண்பதற்கு, அவர் பாடங்களைச் சொல்லித் தருகிறார் என்று, கர்தினால் தாக்லே அவர்கள் தன் திருவருகைக் காலச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார். (Zenit)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 November 2018, 14:48