தேடுதல்

கால் பந்தாட்டம் காணும் கொலம்பிய இளையோர் கால் பந்தாட்டம் காணும் கொலம்பிய இளையோர் 

நேர்காணல் – இளையோர் பணியில் கிளேரிசியன் சபை

கிளேரிசியன் ஆண்கள் துறவு சபையினர், உலகின் 65 நாடுகளில் மறைப்பணியாற்றி வருகின்றனர். கொலம்பியாவில் இச்சபையினர் Uniclaritiana பல்கலைக்கழகத்தை நடத்துகின்றனர்.

மேரி தெரேசா - வத்திக்கான்

நேர்முகம் - கிளேரிசியன் சபையின் அ.பணி.லார்டு வின்னர்

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், 1909ம் ஆண்டிலிருந்து  மறைப்பணியாற்றிவரும் இச்சபையினர், அக்கால ஆப்ரிக்க அடிமை மக்களின் வழிமரபினருக்கு அதிகமாகச் சேவையாற்றி வருகின்றனர். கொலம்பியாவின் Quibdo  நகரில் கிளேரிசியன் சபையினர் நடத்தும், Uniclaritiana பல்கலைக்கழகம் இளையோர்க்குப் பல்வேறு நற்பணிகளை ஆற்றி வருகின்றது. அப்பல்கலைக்கழகம் பற்றி இன்று பகிரந்துகொள்கிறார், அச்சபையின் அ.பணி.லார்டு வின்னர் அவர்கள். இவர், உரோம் தலைமையகத்தில் இருந்துகொண்டு, அச்சபையின் வளர்ச்சித்திட்டங்களைத் திட்டமிட்டு அதற்கான நிதியுதவிகளைப் பெற்றுத்தரும் பணிகளை ஆற்றி வருகிறார். இப்பணி தொடர்பாக, பல்வேறு நாடுகளுக்கும் இவர் சென்று வருகிறார் அ.பணி.லார்டு வின்னர் அவர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 October 2018, 14:50