தேடுதல்

Vatican News
எல் சல்வதோர் கத்தோலிக்கர்கள் எல் சல்வதோர் கத்தோலிக்கர்கள்  (AFP or licensors)

பொதுநிலை மறைப்பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது

உலகின் மக்கள் தொகை பெருக்க விகிதத்தோடு ஒப்பிடும்போது, கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. அருள்பணியாளர்கள், மற்றும், துறவறத்தார் எண்ணிக்கையும் குறைந்தே வருகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 21ம் தேதி, உலக மறைபரப்புப்பணி ஞாயிறு கொண்டாட்டப்படுவதையொட்டி, உலகில் கத்தோலிக்க திருஅவை குறித்து புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது, ஃபீதெஸ் செய்தி நிறுவனம்.

பாப்பிறை மறைபரப்பு கழகங்களின் அமைப்பால் நடத்தப்படும்  ஃபீதெஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, உலகில் மக்கள் தொகை, 2015ம் ஆண்டிலிருந்து, 10 கோடியே 33 இலட்சத்து 48 ஆயிரம் அதிகரித்து, 2016ம் ஆண்டு, 735 கோடியே 22 இலட்சத்து 89 ஆயிரமாகியுள்ளது.

இதே காலக் கட்டத்தில், கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை, 1கோடியே 42 இலட்சத்து 49 ஆயிரம் அதிகரித்து 129 கோடியே 90 இலடசத்து 59 ஆயிரமாக இருந்தது எனவும் கூறுகிறது ஃபீதெஸ் செய்தி நிறுவனம்.

உலக மக்கள் தொகைப் பெருக்க விகிதத்தோடு ஒப்பிடும்போது, கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 0.05 விழுக்காடு குறைந்தே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் ஆயர்களின் எண்ணிக்கை அதிகரித்து, 5,353 ஆகியுள்ளதாகவும், ஆனால் அருள்பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து, 4 இலட்சத்து 14 ஆயிரத்து 969 ஆகியுள்ளதாகவும், துறவறத்தாரின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாகவும் கூறும் 2016ம் ஆண்டின் புள்ளிவிவர அறிக்கை, பொதுநிலை மறைப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கிறது.

20 October 2018, 15:18