தேடுதல்

2013ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி, இத்தாலியின் லாம்பதூசா தீவுக்கருகே 368 பேர், கடலில் மூழ்கி இறந்த துயர நிகழ்வின் நினைவுக் கூட்டம் 2013ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி, இத்தாலியின் லாம்பதூசா தீவுக்கருகே 368 பேர், கடலில் மூழ்கி இறந்த துயர நிகழ்வின் நினைவுக் கூட்டம்  

லாம்பதூசா தீவில், இறந்தோர் நினைவாக வழிபாடு

லாம்பதூசா தீவுக்கருகே, எரித்திரியா நாட்டைச் சேர்ந்த 368 பேர் கடலில் மூழ்கி இறந்த துயர நிகழ்வின் 5ம் ஆண்டு நினைவாக, சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பு, ஒரு வழிபாட்டை ஏற்பாடு செய்தது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

2013ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி, இத்தாலியின் லாம்பதூசா தீவை நோக்கி வந்த எரித்திரியா நாட்டைச் சேர்ந்த 368 பேர், கடலில் மூழ்கி இறந்த துயர நிகழ்வை நினைவுகூர, சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பு, ஒரு வழிபாட்டு நிகழ்வை ஏற்பாடு செய்தது.

லாம்பதூசா தீவின் கடற்கரையில் நடைபெற்ற இந்த வழிபாட்டு நிகழ்வில், ஐந்து ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இத்துயர நிகழ்விலிருந்து தப்பித்த புலம்பெயர்ந்தோர் சிலரும் பங்கேற்றனர்.

இத்தாலிய ஆயர் பேரவை, மற்றும் இத்தாலியின் ஏனைய கிறிஸ்தவ சபைகள் ஆகியவை இணைந்து, சான் எஜிதியோ அமைப்புடன் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், ஆபத்தான கடல் பயணங்களால் உயிரிழந்த அனைவரும் நினைவுகூரப்பட்டனர்.

1990ம் ஆண்டு முதல், ஐரோப்பிய நாடுகளை அடைவதற்கு கடல் பயணங்களை மேற்கொண்ட புலம்பெயர்ந்தோரில், இதுவரை, 37,000த்திற்கும் அதிகமானோர் கடலில் மூழ்கி இறந்துள்ளனர்.

புலம்பெயர்ந்தோருக்கு தனிப்பட்ட முறையில் பணியாற்றிவரும் சான் எஜிதியோ அமைப்பின் உதவியால், சிரியா, மற்றும் எத்தியோப்பியாவிலிருந்து புலம்பெயர்ந்த, 2000த்திற்கும் அதிகமானோர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 October 2018, 16:35