யாங்கூன் பேராயர்,  கர்தினால் சார்லஸ் மாங் போ யாங்கூன் பேராயர், கர்தினால் சார்லஸ் மாங் போ 

குணப்படுத்துங்கள், புதிய காயங்கள் தேவையில்லை

இலட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையின் நாடாக மியான்மாரை அமைப்பதற்கு, மக்களால் தேர்ந்துகொள்ளப்பட்ட அரசும், இராணுவ அரசும் இணைந்து பணியாற்ற வேண்டும் - கர்தினால் போ

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மியான்மாரின் வரலாறு, காயப்பட்ட கதை என்றும், புதிய காயங்களைத் திறக்காமல், பழைய காயங்களைக் குணப்படுத்த வேண்டிய நேரம் இது என்றும், யாங்கூன் பேராயர்,  கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் கூறியுள்ளார்.

மியான்மாரில் அமைதியைக் கொண்டுவர ஆர்வம் கொண்டுள்ள அனைவருக்கும் என்று, செப்டம்பர் 10, இத்திங்களன்று கர்தினால் போ அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்நாட்டு மக்களும், குறிப்பாக இளையோரும் நீண்ட காலமாக எதிர்பார்க்கும் விடயங்கள் பற்றி எழுதியுள்ளார்.

அர்த்தமுள்ள சுதந்திரம் மற்றும் மனித முன்னேற்றத்திற்காக மக்கள் நீண்ட காலமாகக் காத்திருக்கின்றனர் என்றும், இலட்சக்கணக்கான இளையோர், வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புக்களுக்காகவும், மாணவர்கள் தரமான கல்வியைப் பெறவும் காத்திருக்கின்றனர் என்றும் கர்தினாலின் அறிக்கை கூறுகின்றது.

2010ம் ஆண்டிலிருந்து நாட்டில் நம்பிக்கையின் அடையாளங்கள் தெரியத் தொடங்கின என்றும், 2016ம் ஆண்டில் சனநாயக அரசு ஆட்சிக்கு வந்தது அவற்றில் ஒன்று என்றும் கூறியுள்ள கர்தினால் போ அவர்கள், தற்போது சனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் மற்றும், அமைதிக்கான நடவடிக்கைகள் உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 September 2018, 15:06