தேடுதல்

இஸ்பானிய கத்தோலிக்கரின் 5வது தேசிய சந்திப்பு இஸ்பானிய கத்தோலிக்கரின் 5வது தேசிய சந்திப்பு 

இஸ்பானிய கத்தோலிக்கரின் 5வது தேசிய சந்திப்பு

"மறைபரப்புப் பணியின் சீடர்கள்: இறைவனின் சாட்சிகள்" என்ற மையக்கருத்துடன் டெக்சாஸ் மாநிலத்தில் நடைபெறும் இஸ்பானிய கத்தோலிக்கரின் ஐந்தாவது தேசிய சந்திப்பு

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் டெக்சாஸ் மாநிலத்தில், கிரேப்வைன் எனும் நகரில், இஸ்பானிய கத்தோலிக்கரின் ஐந்தாவது தேசிய சந்திப்பு, செப்டம்பர் 20, இவ்வியாழனன்று துவங்கியது.

"Encuentro", அதாவது, இஸ்பானிய மொழியில், ‘சந்திப்பு’ என்று பொருள்படும் பெயரில் நடைபெறும் இந்த தேசிய சந்திப்பில், பங்கு அருள்பணியாளர்கள், மேய்ப்புப்பணி தன்னார்வத் தொண்டர்கள், மற்றும், பொதுநிலையினர் என, 3,400 பிரிதிநிதிகளும், 130க்கும் அதிகமான ஆயர்களும் கலந்துகொள்கின்றனர்.

"மறைபரப்புப் பணியின் சீடர்கள்: இறைவனின் சாட்சிகள்" என்ற மையக்கருத்துடன் நடைபெறும் இச்சந்திப்பிற்கு, திருத்தந்தை அனுப்பிய காணொளிச் செய்தி, இச்சந்திப்பின் துவக்க விழாவில் ஒளிபரப்பானது.

1972ம் ஆண்டு, இஸ்பானிய கத்தோலிக்கரின் முதல் "Encuentro" நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 1977, 1985, 2000 என்ற மூன்று ஆண்டுகள், இச்சந்திப்புக்கள் நடைபெற்றத்தைத் தொடர்ந்து, இவ்வாண்டு, ஐந்தாவது சந்திப்பு நடைபெற்று வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 September 2018, 15:25